திரை கடல் ஓடி ..திரவியம் தேடி ..
வாழ்க்கையில் நம் கனவுகள் நிறைவேற,சில சமயம், பலகாலம், காத்திருக்க வேண்டியுள்ளது. நம் முயற்சியும் உழைப்பும் தவிர .நம்பிக்கை இழந்த தருணங்களில், பாய்மரம் திருப்பி ,வாழ்க்கையின் திருப்பங்களுக்கு வித்திடுகின்றனர்.கடவுள் போல் கை கொடுக்கும் ஆசான்கள். மேலும் பீடிகை இன்றி, விஷயத்திற்கு வருகிறேன்.
இருபத்திரண்டு வயது இளைஞனாய் இருக்கும் போது, திரை கடல் ஓடி திரவியம் சம்பாதிக்கணும் அப்படிங்கிற ஒரு தீவிர ஆசை, மனசுக்குள்ளே. எப்படி?. இந்த எண்ணம் எனக்குள்ளே ஊற்றெடுத்தது ,என யோசிக்கிறேன். முதலாவது என் தங்கை 1969 ம் வருடம் டாக்டர் கணவருடன் நியூசிலாந்து போனதும்.. அப்புறம் 1970 களில் வளை குடா நாடுகள், எண்ணெய் வளத்தில் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டதும் .. மந்தையாய் நம்மூர் மக்கள் வேலை தேடிப் போனதும் ...என்னுடன் வேலை பார்த்த சிலர் பத்து, பதினைந்து மடங்கு சம்பாதித்ததும், என என் ஆசைத் தீயில் நெய் ஊற்றிய செய்திகள். இவர்களை ஆவென்று வாய் பிளந்து நான் அண்ணாந்து நோக்கிய தருணங்கள் . என் தகுதியும் திறமையையும் யோசித்ததில், கனவுக்கும் நனவுக்குமான இடைவெளி வானத்துக்கும் பூமிக்குமானது ..நல்லாவே புரிஞ்சுது. ஆனாலும் கண் மூடினா, கடல் கடந்த நாடுகள் தான் கனவில் தெரிந்தது .
![]() |
| Riyadh Television center |
