அந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூன், 2012

மண்ணின் மணம் ...வேரும்.. விழுதும் .

அந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில்
நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, " கொள்ளிடத்தில் குளிச்சிட்டு வரலாம்னு ", தோணுது. ஆத்துலே குளிச்சு கன காலம்  ஆச்சு. கரை தாண்டினா, கூப்பிடும் தூரம் தான்,ஆறு. கை தட்டினா காது கேட்கும் தூரத்துக்கு, கொஞ்சம் அப்பாலே. பேரனும் கூட வரணும்னு அடம் பிடிக்கிறான்.பெரும் பகுதி பாலைவன துபாயில் வளந்தவன். தளிர் நடைக் காரனுடன் துண்டு சகிதம் பயணம்.

 நீரில் நர்த்தனம் ..அன்சுமன்