பகிராத பகிர்வுகள் ..
அள்ள அள்ளக் குறையா,
அறிவுக் களஞ்சியம்.
மின்னல் போல் வரும்,
மின்னஞ்சலாய் மடல்.
இறை முதல் இரை தேடும்,
இணையதளம்.
யாவும் தேடு களம்.
வலைஎனும் விளக்கில்,
விட்டில் பூச்சியாய்.
மென்பொருள் பின்னலில்,
மீள இயலா வண்டாய்.
மவுஸ் கிளிக்கின் இடையே
மவுன நொடிகள், யுகங்களாய்.
வலைத் தளம் கண்ணுற,
விழித்திமை காக்கும் நேரம்,
விளி முடியா தூரம் போலும்.
விழித்திருந்து, விடிய விடிய
பிழை திருத்தி, பகிர்வதற்கு
எழுதியதை, ஏற்றும் முன்னர்,
எல்லாமே மறைந்த மாயம்.
தட்டுத் தடுமாறி
தவறிய, என் கை சொடுக்கால்.
( எழுதி முடித்த பகிர்வை பிரசுரிக்கும் முன், என் தவறான கணினி இயக்கத்தால் இழந்த வருத்தத்தில் எழுதியது...)
