நீரில் நனைந்த ரோசாவாய்,
நிறம் கூடிச் சிரிக்கும் என் மனசு.
கானகத்து மூங்கில்களில்கசிந்து வரும் குழலோசையாய்
கனிந்து விடும் என் மனம்.
கொட்டங்கச்சி தம்பூராவில்
கொப்பளிக்கும் கீதம், என்
குதூகலிக்கும் உள்ளத்தில்.
நீ சினந்தால் ...
நீர் பட்ட காகிதப் பூவாய்
நிறம் வெளுக்கும் என் மனசு.
புல்லாங்குழல் உள்ளில்,
புக மறுத்த காற்றாய்,
ஒலியின்றி ஓலமிடும் .
இதய வீணையின் தந்திகள்
இற்றுப் போகும் மீட்டாமல்.
அரும்பாமலே,வதங்கி
அப்பொழுதே கூம்பிப் போகும்.
என் இதயம்.
