மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி .....
கவலையின் ரேகைகள்,
கண்களில் தளும்ப,
வாராத தலை,ரோமம்
வழிக்காத முகம்.
பிரசவ அறையில்
பிரவேசம் இல்லை.
விடிய விடியக் காவல்,
வாசல் நடையில்.
செவ்வரி விழிகள்,
சிந்தனைச் சுழல்கள்.
வரும் உயிர்,
தரும் உயிர்,
இரு உயிர் பற்றி,
இனமறியா பயம்.
அழுகுரல் கேட்க,
அங்கம் பதைக்கும்.
தாதியர் கிண்டலில்
தந்தை முகம் நாணும்.
மகவு பிறக்க,
மகன் இவன்,
தந்தையாய், ஆன நல்
தருணம், இன்று.
நூறாம் பதிவில்,
நூறாண்டு மேலும்
வாழ, ஈன்றோரை
வாழ்த்தி, சீர் மிகு கவிதை பாடி,
நன்றிக் கடனை,
நா நயம் கூட்டி
நானிலம் போற்ற,
நவின்றாய். நீ வாழி!.
( நண்பர் தினேஷ்குமார் அவர்களின் நூறாம் பதிவை ,வாழ்த்தி சமர்பிப்பது )