நிலவே நீ என்னைச் சுடாதே .1.
அங்கேயே இருங்கள்! அள்ளிச் செல்வம் குவியுங்கள் !
இங்கே ஓர் அபலை இருப்பதையே, மறந்தீர்!. என்றாள்.
அடுக்கடுக்காய் அள்ளிக் கொட்டினாள். என் அல்லிக்கொடியாள்.
அல்லலில், அங்கே அங்கலாய்க்கிறாள். என் அங்கயர்க்கண்ணி.
பாலை வெளியில் பாழும் வெய்யிலாய், பதைக்குதே என் மனம்.
பாவை அவள் சொல் பாய்ச்சியதே, இதயத்தில் இன்னுமோர் கூர் அம்பு.
எப்படிச் சொல்வேன். என் சொல்லித் தெரிய இயலா சோகங்களை.
எவருக்குப் புரிய வைப்பேன் ?.என் இதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை.
பித்தனாய் பேதலித்துப் போனதும், நித்திரை இன்றி,
நித்தமும் நடைப்பிணமாய், நான் படும் அவலங்களை,
பிரிவுகளின் பெரும் துயரில், எண்ணுகிறேன். ஏன் பிறந்தேன் ?.
பிறக்காமலே இருந்திருக்கலாம். பிறந்த அன்றே இறந்திருக்கலாம்.
( நிலவு இன்னும் சுடும் ......)
நித்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
முஷ்டாகின் கஷ்டம் ...
முஷ்டாகின் கஷ்டம் ...
முடிவான பயணத்திற்கான முத்தாய்ப்பு ஓலை.
வெண்தாடி வேந்தரின் அஞ்ஞாத வாசமாம்,
பதினான்கு ஆண்டுகளின் பணிக்கான பயணசீட்டு.
சுருக்கென்று சொல்லாமல், கொள்ளாமல் தைத்த கூரம்பு.
பின் நோக்கி பார்க்கிறார். தன் மன ஏட்டை புரட்டுகிறார்.
பின் நோக்கி பார்க்கிறார். தன் மன ஏட்டை புரட்டுகிறார்.
சல்லாபம், உல்லாசம். கடந்த முறை சங்கமத்தின்,
நித்திரை கலைந்து, வந்த முத்திரை.இன்று சிறுவன்.
கனவுகளுடன் கண்களில்,எதிர்காலம் தேக்கி நிற்பவன்.
வினா எழுப்பும் சிறுவனுக்கு,
விடை சொல்ல வேண்டும்,எதிர் காலம்.
அருமை நாயகிக்கு ஆசையாய் பூட்ட ,
நகைகள் தேவை இன்னும்,
பாக்கியாய்,பாகிஸ்தானில்,
பாதியிலே நிற்கின்ற பளிங்கு மாளிகை.
எண்ணற்ற எதிர்பார்ப்புக்கள்,
இன்னும் எல்லோரிடமும்.
வறுமைக் கோட்டை தாண்ட,
வறண்ட நிலத்திற்கு வந்ததால்,
வனப்பு சுந்தரி, வாலைக் குமரி,
இன்று வயோதிக கிழவியனாள்.
காதலால் கவர்ந்தவளின்,
கன்னக் கதுப்பில், கணக்கில்லா கோடுகள்.
வெளுத்த தலை, நரைத்த தாடி,
விழுந்த பற்கள், இவருக்கு வெளிறிய தேகம்.
வாழ்க்கை பயணத்தின் கடைசி அங்கம்.
இது ஓர், உதிரப்போகும் சருகு.
கிழவனும் கிழவியுமாய்,
சேர்ந்து கூழ் குடிக்க ,
வந்த நல்வாய்ப்பு இது.
ஆனால் அங்கே வரேவேற்பில்லை.
வருவாய் இழக்கப் போவதால்.
இன்று பட்டுப் போனது,
இந்த பணம் காய்ச்சி மரம்.
நிழலில்லை. நிதரிசனமாய்,
நான் கண்ட நிசம் இது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)