நிலத்தடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலத்தடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 நவம்பர், 2010

என்று தணியும் என் தாகம் ...

என்று தணியும் என் தாகம் ...
















நிசாமாதானுங்க !
நிலத்தடி நீரு,
வேருக்குக் கிழே
வெகு ஆழம் போச்சுது.

கடல் நீரும்   
கன தூரம் கசிஞ்சு, 
ஊருக்கு உள்ளே, 
உட்புகலாச்சுது.

ஆறு, குளத்துலே 
அமில அழுக்கும், 
கழிவு நீரும் கலந்து, 
கூவம் போல ஆச்சுது.

கொட்டலை 
குழாயிலே 
சொட்டு சொட்டா
சொட்டுது நீரு.

ஏங்கி நிக்கிறேன் 
எக்கி எக்கிப்  பார்க்கிறேன்.
என்று தணியும் 
என் ...தாகம்....