
தோற்றால் துவளாதே !
துணிவில் தொய்யாதே !
விழுந்தால் எழுந்திரு,
விழிப்புடன் கவனி.
வையகம் புலப்படும்.
வானம் உன் வசப்படும்.
கூழாங்கல் காக்கைப் பாடம்.
உழைப்பைக் கூறும் தேனீ, எறும்பு .
படிப் படியாய், உன் அடியை
பதறாமல் எடுத்து வை.
திண்ணமாய்,
திடமாய்.
ஏறிடுவாய் ஏணியை ,
ஏன் இன்னும் தாமதம்?.
என்ன இல்லை... நம் தாயகத்தில் ?.
எல்லை இல்லை........நீ நினைத்தால் .....