பயணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2011

விடுமுறைப் பயணம்..1

விடுமுறைப் பயணம்..1

துள்ளும் சிறார்க்கு
பள்ளி விடுமுறை.
பேரன் பேத்தியோடு 
பெரும் ரயில் பயணம். 

செண்பகம் அம்மாச்சி 
சென்னையில் ...
பிரேமா பாட்டி 
பம்பாயில் ...




தற்போதைய
தலைமுறை
தாத்தா பாட்டிகளின்
தலையாய வேலை ,இது 
தாங்கிப் பிடிக்கும் வேர்களாய் ..




ஓடி ஓடி உழைத்து, 
ஒய்ந்து போன, எமக்கு 
வாழ்க்கையில் காண 
விடுபட்ட தலங்களை,
வழிபாட்டு இடங்களை,
வலம் வரவும் ,வணங்கிடவும் 
வந்ததோர் வாய்ப்பு.