வீரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

வீரமா ?......விவேகமா ?.

வீரமா ?......விவேகமா ?.  

நேர் கொண்ட,
நெஞ்சம் வேண்டும்.
நீதிக்கு மட்டும்,
அஞ்சல் வேண்டும். 
பதைக்கும் நெஞ்சு,
பாதகங்கள் பல  கண்டு.

ஆயினும், அயலூர் 
அந்நிய மண்ணில், 
அக்கரைச் சீமையில், 
அண்டிப் பிழைக்கையில், 
ஆகாதையா நம் வீரம்!.
அனுசரித்தல்  நலம்.

அடுப்பெரிதல் நின்று போகும். 
அன்னைக்கு சிகிச்சை, 
ஆபத்தில் முடிந்து போகும்.
அடுத்தடுத்த சிலவுகளுக்கு, 
எடுத்தெடுத்து பணம் அனுப்ப, 
எதிர் பார்ப்பீர், யாரை நீயும் ?.

விவேகமாய் காலம் கழித்து, 
வெற்றியுடன் திரும்பி வாரும்.
வழிமேல் விழி வைத்து 
வஞ்சியவள் காத்திருக்கா!.