ஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..அண்ணா பல்கலைக் கழகம்
மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களுக்காக, "கேக்' போல் வெட்டப்பட்ட சர்க்கரை பீர் மலை பகுதியில், ஆளில்லா விமானம் மூலம் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.- தினமலர் நாளேடு.
மதுரை கீழவளவு பி.ஆர்.பி.,கிரானைட் குவாரியில், ஆளில்லா விமானம் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள்...தினமலர்
புழக்கடை ஓரம் உலக்கை வைத்து " மாதவிலக்கு, தீட்டு ", என ஒதுங்கி இருந்த தாய், பின் தமக்கை, தங்கை, மனைவி, மகள், என ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும், காலம் காலமாய் எதிர்கொள்ளுகின்ற,தொடர்கின்ற இயற்கை நிகழ்ச்சி. பாராமுகம், பரிதவிப்பு, இயலாமை என அத்துடன் முடிகிறது,ஆண்களின் அவதி.
உடல் அளவிலும், மனதளவிலும் மாதம் தோறும், மாதரை கொடுமை படுத்துகிறது, இந்த மாத விடாய்.தாங்க முடியாத உதிரப் போக்கு, சொல்ல இயலாத வலி, வேதனை, எரிச்சல் என நீள்கிறது, பெண்களுக்கு சோதனை.இந்தக் காலங்களில், பெண்கள் பழைய துணிகள், காகிதங்கள்,காய்ந்த மரத் தழைகள், சமயத்தில் சாம்பலை யும் கூட உபயோகிப்பதாய்,ஆய்வுகள் எடுத்துக் காட்டு கின்றன.
இந்தப் பழக்க வழக்கங்கள், பிறப்புறுப்பில் பல தொற்று நோய்கள் உண்டாகவும், கர்பப் பையை நீக்கும் அளவிற்கு காரணமாய், பல சமயம் அமைகிறது.தன உடல் சுகாதாரம் பற்றிய அறியாமையும், வசதி இன்மையும், இதற்கான முக்கிய காரணங்கள்.இன்னமும்,நம் நாட்டில் 88 % விழுக்காடு மகளிர், நாப்கின் உபயோகப் படுத்த வில்லை என்கிறது, பெண்களின் சுகாதாரம் பற்றிய மற்றுமொரு ஆய்வு.
நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். தாய் விவசாயக் கூலி. பத்தாம் வகுப்பை எட்டாத முருகானந்தம்,மனைவி தனக்குத் தெரியாமல் மறைத்து எடுத்துச் செல்லும் பொருளைப் பற்றி வினவ .." இது பொம்பளைங்க சமாசாரம்..உங்களுக்கு சம்பந்தமில்லை !", என்பதில் தொடங்குகிறது, இந்தக் கண்டு பிடிப்பு.இதற்குப் பின்னால் பத்தாண்டு கால கடும் உழைப்பு, விலகிப் போன மனைவி, விட்டுப் பிரிந்த தாய், தொடர்பறுத்த நண்பர்கள் ' பைத்தியம் ', என்ற பட்டம், இன்னும் எத்தனையோ, பல இன்னல்கள்.
இன்று 47 வயதாகும் திரு முருகானந்தம் நாப்கின் சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் ஜான்சன் &ஜான்சன், ப்ரொக்டர் &காம்ப்ளே அவர்களின் நாலு கோடி ரூபாய் இயந்திரத்தை வெறும் அறுபத்தி ஐயாயிரம் ரூபாயில் வடிவமைத்து வழி காட்டியுள்ளார்.பதிமூணு ரூபாய் விலையில் எட்டு நாப்கின்கள், உலகத் தரத்தில். மற்ற நாப்கின்களை விடவும் சுமார் பதினைந்து மடங்கு விலை குறைவாய் ,சந்தையில் விற்பனை.
இந்தியாவில் 27 மாநிலங்களிலும் உலகத்தில் 110 நாடுகளிலும் இவரின் நாப்கின் தயாரிக்கும் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஜனாதிபதியிடம் விருது பெற்றவர்.பல நிறுவனங்கள் பாராட்டுகின்றன இவரை.படித்தவர் நிறைந்த அவையில்,இன்று ஆங்கிலத்தில் உரையாற்றும் திறன் வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஒரு கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கு ஆளின்றி, மகளிரின் பிரச்சினை அறிய, தானே நாப்கின் அணிந்து, ரப்பர் பலூனில் ஆட்டு ரத்தம் நிறைத்து, சோதனை மேற் கொண்டவர். லாபம் கருதாமல் சமூக நோக்கோடு, வசதி இல்லாரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், செயல் படுகிறது இவரின் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம்.
Registered Office
SF No 577,KNG PUDUR ROAD,
SOMAYAMPALAYAM ( PO ),
COIMBATORE - 641 108.
e-mail:muruganantham_in@yahoo.com Mobile No : 9283155128
இவர் தன அனுபவத்தை பகிர்வதை அன்பு கூர்ந்து கீழ் காணும் கானொளியில் காண்க.
இன்று பழித்தவரை பாராட்டுகிறது உலகம் . பிரிந்த பத்தினியும் மீண்டும் கூடவும், தான் மேற்கொண்ட முயற்சியில் மனம் தளராமல், உழைப்பின் உச்சத்தில்,வெற்றி நடை போடுகிறார்.
மனம் மகிழ்கிறேன்....உதயம் ...இந்திய வானில் இன்னுமொரு நட்சத்திரம் .
தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல், சங்குக் கழுத்தில் சின்னதாய் ஒரு மச்சம், சன்னமாய் அவள் உடலில் ஆலிலைக் கோடுகளாய் பவனி வரும் பச்சை நரம்புகள், இதழோரம் இள நகை.. சின்ன வயதில் என் கற்பனையில் வலம் வந்த யவன ராணி.
சோறு தண்ணியின்றி, கண் துஞ்சாமல், கிறங்கிய மனம். அலைகடலும் ஓய்ந்திருக்க, ஆழ்கடலில் துடுப்பிட்டு அகக் கடலை அலைக்கழித்த பூங்குழலி. வந்தியத் தேவனின் வசீகரமும், உடலெங்கும் வீரத் தழும்புகள் விழுப் புண்களாய், போர் பல கண்ட பழு வேட்டரையர் என கண்ணில் விரிந்த, காப்பியம்.பொன்னியின் செல்வன்.கல்கி தந்த வரம்.கடலைக் குறுக்கி கமண்டலத்தில் வைத்தார் போல் இன்னும் நெஞ்சப் பேழையில்..
காலனி ( காலணி ) ஆதிக்கமும் ..நான் பட்ட கஷ்டங்களும் .
காலனி ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயனைப் பற்றி..ஆதவன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டதாய் கூறுகிறது, சரித்திரம்.அவன் விட்டுச் சென்றது ரயில் பாதைகளை. எடுத்துச் சென்றது எண்ணற்ற பொக்கிஷங்களை. விதைத்துச் சென்றது ஆங்கிலத்தை, மாற்றிச் சென்றது, நம்மில் ஆடை மாற்றங்களை. அட்டை போல், இவை, ஒட்டிக் கொண்டு, நம்மை ஆட்டிப் படைக்கின்றன, இன்றும். காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்ட ஆசிய நாடுகள் வீறு கொண்டு எழுந்ததாலோ, விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலோ, விடுதலை பெற்றன என்பது, வரலாறு சொல்லும் கதை.
அந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில் . நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, " கொள்ளிடத்தில் குளிச்சிட்டு வரலாம்னு ", தோணுது. ஆத்துலே குளிச்சு கன காலம் ஆச்சு. கரை தாண்டினா, கூப்பிடும் தூரம் தான்,ஆறு. கை தட்டினா காது கேட்கும் தூரத்துக்கு, கொஞ்சம் அப்பாலே. பேரனும் கூட வரணும்னு அடம் பிடிக்கிறான்.பெரும் பகுதி பாலைவன துபாயில் வளந்தவன். தளிர் நடைக் காரனுடன் துண்டு சகிதம் பயணம்.
வாழ்க்கையில் நம் கனவுகள் நிறைவேற,சில சமயம், பலகாலம், காத்திருக்க வேண்டியுள்ளது. நம் முயற்சியும் உழைப்பும் தவிர .நம்பிக்கை இழந்த தருணங்களில், பாய்மரம் திருப்பி ,வாழ்க்கையின் திருப்பங்களுக்கு வித்திடுகின்றனர்.கடவுள் போல் கை கொடுக்கும் ஆசான்கள். மேலும் பீடிகை இன்றி, விஷயத்திற்கு வருகிறேன்.
இருபத்திரண்டு வயது இளைஞனாய் இருக்கும் போது, திரை கடல் ஓடி திரவியம் சம்பாதிக்கணும் அப்படிங்கிற ஒரு தீவிர ஆசை, மனசுக்குள்ளே. எப்படி?. இந்த எண்ணம் எனக்குள்ளே ஊற்றெடுத்தது ,என யோசிக்கிறேன். முதலாவது என் தங்கை 1969 ம் வருடம் டாக்டர் கணவருடன் நியூசிலாந்து போனதும்.. அப்புறம் 1970 களில் வளை குடா நாடுகள், எண்ணெய் வளத்தில் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டதும் .. மந்தையாய் நம்மூர் மக்கள் வேலை தேடிப் போனதும் ...என்னுடன் வேலை பார்த்த சிலர் பத்து, பதினைந்து மடங்கு சம்பாதித்ததும், என என் ஆசைத் தீயில் நெய் ஊற்றிய செய்திகள். இவர்களை ஆவென்று வாய் பிளந்து நான் அண்ணாந்து நோக்கிய தருணங்கள் . என் தகுதியும் திறமையையும் யோசித்ததில், கனவுக்கும் நனவுக்குமான இடைவெளி வானத்துக்கும் பூமிக்குமானது ..நல்லாவே புரிஞ்சுது. ஆனாலும் கண் மூடினா, கடல் கடந்த நாடுகள் தான் கனவில் தெரிந்தது .
மலைக்க வைக்கும் மாற்றுத் திறனாளி ( Daniel Kish ) .
விழி படைத்தோரே வியக்க வைக்கும் ஆற்றல். பார்வைத் திறன் கொண்டோரும், பதை பதைக்க வைக்கும் செயல் திறமை. இந்த சாதனைச் சிங்கத்தின் பெயர் டேனியல் கிஷ் ( Daniel Kish ). விழித் திரையை பாதிக்கும் மிகக் கொடூரமான புற்று நோயால், பிறந்த ஏழே மாதங்களில் ஒரு கண்ணும், பதிமூன்றாவது மாதத்தில் மறு கண்ணும், மருத்துவர்களால் அகற்றப் பட்டவர். உயிர் காக்கும் உபாயம்,வேறு ஏதும் இன்றி. அன்றிலிருந்து நாவினால் ஒலி எழுப்பி, காதுகளை கண்கள் ஆக்கி, பார்வை இழந்தோர்க்கான புது உலகம் காண எத்தனிக்கிறார்.
ஒரு வாரம் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டு,மேலூர் மேடோஸ் ( Melur Meadows ) வந்திருந்தோம். இங்கு வசிப்பவர்களோடு அளவளாவியதில், ( Lyaa Wellness center ) இயற்கை வைத்தியம் செய்து கொண்டதாகவும் ,உடல் பருமன் மற்றும் வியாதிகளின் தாக்கம் குறைந்து நலம் பெற்றதாக விளம்பினர்." யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே",எனபது போல் எங்களது கணிசமான தொப்பை ,நிறையவே தொந்தரவு கொடுத்தது. காலில் மூட்டு வலியும் கிட்டத் தட்ட நிரந்தர விருந்தாளியாய். கூட்டி கழிச்சி பார்த்து, வந்ததற்கு வைத்தியம் பண்ணிக் கிடலாம்ன்னு, முடிவுக்கு வந்தோம். உண்மையிலேயே தேன் நிலவு இங்கு தான் ஆரம்பிச்சுது.முதலில், திட உணவில் ஆரம்பித்து ,அப்புறம் நான்கு நாட்கள் காலையில், மூலிகைத் தேநீர் கொடுத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தேனும் எலுமிச்சையும் கலந்த தண்ணீர் தந்தாங்க. இதை குடிச்சிட்டு இரவில் நிலவைப் பார்த்தோம் .அப்புறம் என்னாங்க?.
மே 17 ம் தேதி குளித்து முடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்த வாடகை ஊர்தியில் ஏறி, மயில் வாகனத்தான் அருள் பெற மருதமலை சென்றோம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததது. அறு நூறு படிகள் ஏற வேண்டுமோ?. என அஞ்சினோம். நல்ல வேளை கோவிலின் அடிவாரம் வரை வாகனம் செல்லும் வசதி பண்ணி யுள்ளார்கள்.மீதமுள்ள முப்பது படிகளில் ஏறியதே மூச்சு வாங்கியது.