ஊக்கமும் ..ஆக்கமும்.
அலை கடல் தாண்டி ,
அரக்கனிடம் சிறை பட்ட
அஞ்சுகம் சீதை மீட்க
அனுமனின் ஆற்றல் உணர்த்தி
அளவிலா உதவி செய்தான்.
கரடி முகம் கொண்டான்.
கனத்த மதி கொண்டான்.
வாமணனை எழு முறை
வலம் வந்த ஜாம்பவான்.
பிராட்டி சீதையவள்
பிஞ்சுப் பிராயத்தில் ,வில்
பேழைதனை நகர்த்தி ,பின்
பெரும் போட்டிக்கு வித்திட்டாள்.
வில்லொடித்து,வீரம் காட்டி
விவாகத்தில் முடிந்த கதை .
மிதிலையில் மன்னன் சனகன்
மகளின் மணம் முடிக்க
உதவியதொரு சிவ தனுசு.
பாரதத்தில் பீமனுக்கு,
பார் புகழ்ந்த வீரனுக்கு,
கீசகனை வதம் பண்ண
கிருஷ்ணன் சூசகமாய்
தந்திரமாய் உதவியதொரு
தலைப்பு மாற்றிய தர்ப்பைப் புல்.
தம் ஆற்றல், தாம் உணரா
தரணியில் மாந்தர் பலர் .
தர்ப்பையாய்!.
தனுசாய்!.
மந்திரியாய்!.
மாயக் கண்ணனாய்!.
எப்படியோ?.
எழுப்பிடுவீர்.
உறங்குகின்ற
உள்ளம் தனை.
விதையும்....
விருட்சமாகும்.. .
நன்றி :கூகுள் படங்கள் .
தர்ப்பையாய்!.
பதிலளிநீக்குதனுசாய்!.
மந்திரியாய்!.
மாயக் கண்ணனாய்!.
எப்படியோ?.
எழுப்பிடுவீர்.
உறங்குகின்ற
உள்ளம் தனை.
விதையும்....
விருட்சமாகும்..
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
உறங்குகின்ற உள்ளம்தனை எழுப்பி ஊக்கம் தருவோர் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கக் கூடும். நாமும் அதனை பிறருக்குச் செய்து, விதையை விருட்சமாக்க முனையலாம். நல்ல கருத்து. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகை ஊக்கமளிக்கிறது.திரு ரமணி அவர்களுக்கு என் வணக்கமும்,நன்றிகளும்.
பதிலளிநீக்குஉற்சாகம் அளிக்கும் கருத்துக்கள். வருகைக்கு வணக்கமும்,வாழ்த்துக்கு நன்றியும்.G.M.B..சார்.
பதிலளிநீக்குஒரு விதையும் விருட்சமாகும் பூமகள் கருவாலே
பதிலளிநீக்குசிறு பொறியும் பிரபஞ்ச ஒளியாகும் வீசும் காற்றாலே
குறு நிலமும் பெருவயலாகும் உழவன் ஏராலே
பெரு ங்கல்லும் அருசிலையாகும் சிற்பியின் உளியாலே
கரு பொருளும் நற்கவிதையாகும் கவிகாளி தாசாலே
உள்ளுக்குள் உறைந்திருக்கும் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தட்டி எழுப்பும் விதமாய் தேர்ந்த உதாரணங்களுடன் நல்லதொரு பதிவு. சிந்தனையாக்கம் வெகுநன்று. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதியாகு சார் ரொம்ப கலாயக்காதிங்க.உங்களோடு பணி புரிந்ததும் உங்களின் அருகாமையில் பற்றிக் கொண்டதும்,சற்றே தொற்றி கொண்டதும்.மற்றபடி பெரும் வார்த்தைகளுக்கு அருகதையில்லை. ஆயின் என்னிடம் காட்டும்,அன்பு என எண்ணிக் கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க .
பதிலளிநீக்குசகோதரி கீதமஞ்சரி அவர்களின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
பதிலளிநீக்குஉற்சாகமூட்டும் கவிதை அருமை
பதிலளிநீக்குதிரு சிவகுமாரன்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
கீதமஞ்சரி அவர்களுக்கு என் வணக்கம்.சிறிது காலமாய் ஒய்வு எடுத்த எனக்கு மிக உற்சாகம் தரும் செய்தி .வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க ..
பதிலளிநீக்கு