வியாழன், 21 ஜூன், 2012

கதை சொல்லும் கொள்ளிடம்.


ஒரு பொன் மாலைப் பொழுது .. 

ஆற்றுக்குப் போகும் பாதை..  

மேய்ப்பர் இன்றி திரும்பும் மாடுகள்  

ம்..ஹூம் ..வேற இடம் பார்க்க வேண்டியது தான். 


தலையில் தழை கட்டு....தறியில் ஆடு  

 பொழுது போச்சு ..குளிக்கப் போகணும் .

முகம் தெரியலே ..கண்ணாடி நீர்.. கலங்கலா ஆகிப் போச்சு . 


போனால் போகட்டும் போடா ..இந்த பூமியில் நிலையாய்.. 

கரை மேல் நின்றிருந்தேன்.. இப்போ கண்ணீரில் மூழ்கி  விட்டேன்.  

நீர்க் கோல வாழ்வை நச்சி..மணல் கோலங்கள் .  

 நீரின்றி அமையாது என் உலகு..   

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி ..      

வெளுப்பதில் என்னை விஞ்ச யார் உளர் !.  

முகம் மழித்தலும் ,முகமன் கூறலும் ..மணல் மேட்டில் தான் . 

ஆத்துக்கு போன மச்சான் ..தண்ணிலே ஆட்டம் போடறாரோ ?.  

ப்ளீஸ் கொஞ்சம் இருங்க.. தாத்தா.  

என்னை கொஞ்சம் நேரா போட்டோ எடுத்திருக்கலாம் ..  

11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றிங்க திரு தனபாலன் .தங்கள் வருகையில் பெரும் மகிழ்ச்சி.

   நீக்கு
 2. சுழல் தளத்தில் இணைத்தமைக்கு நன்றி.
  புகைப்படங்கள் அழகு, வாழ்த்துக்கள். mkmani

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க திரு mkmani.தங்கள் வருகையும் அறிமுகமும் மிக மகிழ்ச்சி தருகிறது.

   நீக்கு
 3. அருமையான படங்கள். கொள்ளிடத்தில் நீர் தான் இல்லை. மணலாவது இருக்கிறதே. பேரனுக்கு சுற்றிப் போடுங்கள். !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க G.M.B. சார்.நிச்சயம் பேரனுக்கு சுற்றிப் போடச் சொல்லுகிறேன்.முதல் முறையாய் ஆற்றில் அவன் அடித்த கூத்து.ரொம்பவும் அனுபவிச்சான்.திரும்பவும் குழந்தை ஆகி விடக் கூடாதா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது.

   நீக்கு
 4. நீங்கள் புகைப் படங்கள் எடுத்த இடம் கீழப் புதகிரி என்று நினைக்கிறேன். ஆற்றுக்குப் போகும் பாதை ஒருகாலத்தில் இரண்டு மணல் லாரிகள் போய் வரும் அகலத்தில் இருந்தது. கொள்ளிடக் கரை காட்சிகளும் ஆற்று நீர் மற்றும் ஊற்று நீர் காட்சிகளும் அருமை. பேரனுக்கு மறக்க முடியாத அனுபவம். G.M.B அவர்கள் சொன்னது போல பேரனுக்கு சுற்றிப் போடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் .கீழப் புதகிரியே தான்.காலப் போக்கில் கட்டை வண்டிப் பாதை ஆகி விட்டது .கிராமத்து எஞ்சிய மிச்சங்களின் நினைவுகளை, பகிர்ந்து கொள்ளுவது பெரும் மன நிறைவைத் தருகிறது.

   நீக்கு
 5. சார்,படங்களும், விளக்கங்களும் அருமை.பேரன் போஸ் பிரமாதமாக்கஃ கொடுக்கிறானே.தாத்தாவுக்கு புகைப்படக்கலையில் பெயர்வாங்கிக் கொடுப்பான் போலிருக்கிறது.உங்கள் படங்களைப் பார்த்து வைகைக் கரைவாசிகளான நாங்கள் பெருமூச்சுவிடவேண்டியதுதான். இங்கு போல் சாக்கடையாக இல்லாமல் வெண்மணல் பரப்பு அருமையாக உள்ளது.கிராமத்தில் எவ்வளவு நாட்கள் தங்குவீர்கள்?

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சார்.ரொம்ப நாட்களாக உங்களை மிஸ் பண்ணிட்டோம்.கிராமம் பக்கத்தில் தான்.மாதம் ஒரு முறையாவது போவோம்.மற்றபடி தஞ்சையில் தான் வாசம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .தஞ்சை வந்தால் வரவேற்க காத்திருக்கிறேன்.அன்புடன்.

  பதிலளிநீக்கு
 7. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 9566661214/9566661215

  பதிலளிநீக்கு