சனி, 11 டிசம்பர், 2010

வாழ்க்கை கோலங்கள் புள்ளி .1.

பொருளாதார சுய மதிப்பீடு


கோலங்கள் சில,பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ அமைகிறது.அவரவர்,கற்பனை செய்ததை,நிஜ வடிவத்தில் கொணர்ந்து இணைக்கும் தன்மையால் திறமையான, அழகான கோலங்கள் உருவாகின்றன.

நம்மை மையப் புள்ளியாய் நினைத்தால் தாத்தா, பாட்டி, பெற்றோர், மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், சக உழியர்கள், மேலாளர் என, பல புள்ளிகள் சேர்ந்ததே, நம் வாழ்க்கையெனும் கோலம். இந்த புள்ளிகளை நாம் எப்படி, வாழ்வில் இணைத்துக் கொள் கிறோம் ( Connecting the dots ), என்பதை பொறுத்து, நம் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் அமைகின்றன.இது மட்டுமின்றி, புள்ளிகளை இணைக்கும் கோட்பாடு திட்டமிடல், முடிவெடுத்தல், செயல்படுத்தல் என நடை முறையில் யோசித்தால், மிகப் பல விஷயங்களை, வெற்றிகரமாக்க உதவுகிறது.
நம்முடைய ஏற்றத் தாழ்வுகளில்பெரும்பாலும், முக்கிய பங்கு ஆற்றுவது, நமது பொருளாதாரமே. போதுமான பணம் இன்றி, அத்தி யாவசிய அடிப்படைத் தேவைகள், கல்வி, வாழ்க்கை வசதி போன்றவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல், துன்பங்களும் பெரும் மனச் சிக்கல்களும், நம்மை ஆட்டி வைக்கின்றன.

முதலில் நம் வாழ்வின் மையப் புள்ளியான, நம்மைப் பற்றிய பொருளாதார சுய  மதீப்பிடு பற்றி, சிறிதே சிந்திக்கலாம். 

வசந்தனும், முகுந்தனும் ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த, இணைபிரியா நண்பர்கள், பள்ளிப் பருவத்தில். வசதி குறைந்த, விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகள், இருவரும். திரு. கல்யாண ராமன் என்ற ஆசிரியரிடம், பள்ளியில் பாடம் பயின்றனர். இவர்களின் மரியாதைக்கும், பெரும் மதிப்புக்கும் உரிய ஆசிரியர், அவர்.

வசந்தனுக்கு படிப்பில் நாட்டமில்லை. பள்ளி இறுதியை தொடாமலே, தினக் கூலியாய் ஜீவனம். முகுந்தனோ பொறியியலில் டிப்ளமா பட்டம் பெற்று, நகரத்தில் வேலை. அவன் மாதச் சம்பளம் ரூ 10,000. மாதத்தில் எல்லா நாட்களும் வேலை கிடைத்தால், வசந்தனுக்கு சுமார் ரூபாய்5000 - வருமானம் கிடைக்கலாம். இயற்கையின் தயவை நம்பிய விவசாயத்தால், வசந்தனின் வாழ்க்கை பெரும் கேள்விக் குறி யாய், எப்போதும் பொருளாதாரச் சிக்கல்களில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தது. முகுந்தனும் பெரிதும் சேமிப்பின்றி "கைக்கு வந்தது வாய்க்கு", என்ற அளவில் வாழ்ந்து வந்தான்.
விடுப்பில் கிராமத்திற்கு வந்திருந்த முகுந்தன், வசந்தனுடன் கூடச் சென்று, நீண்ட நாட்களாய் தொடர்பு விட்டுப் போயிருந்த, ஆசிரியர் கல்யாணராமன் அவர்களை சந்தித்து அளவளாவி அக மகிழ்ந்தனர். ஆசிரியர் இருவரின் நலன் விசாரித்து, வேலை நிலவரம், வருமானம் ஆகியன, கேட்டறிந்தார். வசந்தனும் முகுந்தனும் தங்கள் வருமானப் பற்றாக்குறை பற்றி புலம்ப, இருவரையும் பார்த்து ஆசிரியர், "இன்றைய உங்கள் இருவரின்" சந்தை மதிப்பீடு எவ்வளவு, தெரியுமா ? " எனக், கேட்டார்.
அவ்வாறெல்லாம் சிந்திக்க தோன்றாத அவர்களால், சரியான பதில் கூற இயலவில்லை. மாதம் முழுதும், வேலை கிடைத்து ரூ.5000- ம் ஊதியம் பெற்றால்,வசந்தனின் மதிப்பு "வேலைச் சந்தையில் சுமார் ரூபாய் 8 லட்சம் " எனவும், முகுந்தனின் மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாய் ", எனவும் கூறினார்.
 அவ்வாறு சொல்வதற்க்கான காரணத்தையும் விளக்கினார்.எந்த ஒரு நிறுவனமோ  அல்லது முதலாளியோ, இந்த அளவு பணத்தை ஒரு தேசிய வங்கியில், முதலீடு செய்தால் 8 % வட்டியில், உங்கள் மாதச் சம்பளத்திற்கு நிகரான வட்டி, வங்கி மூலம் கிடைக்கும். இதை "உங்கள் உழைப்புக்கு ஊதியமாய்த் அவர் தருகிறார்" எனக் கூறினார். இந்த அளவு தொகைதான், உங்கள் உழைப்பை பெற, அந்த நிறுவனம் இடும் மூலதனம். 
மேலும்,வேறு எந்த வசதி வாய்ப்புக்களும் இல்லாத நீங்கள் "உங்களையே மூலதனமாகக் கருதி,ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுவதன் மூலம், உங்கள் மதிப்பு, வருமானம் இவற்றை   உயர்த்திக் கொள்ளலாம்", என அறிவுரை கூறினார்.
பின்னர், மேலும் உடனே வசந்தனை, பக்கத்துக்கு நகரில் கொத்தனார் (Mason) பணிக்கான பயிற்சிகள் எடுக்க யோசனை கூறினார். 5, 6 மாதங் களில் அவன் கிட்டத் தட்ட இரு மடங்கு சம்பாதிக்கலாம் எனவும், முகுந்தன் பகுதி நேர வகுப்பில் சேர்ந்து, மூன்று ஆண்டுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து, அவன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினார்.
தினக் கூலியாய் இருப்பவர்,கொத்தனாராய்,மேஸ்திரியாய் என தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு வாழ்க்கையின் வளங்களைக் கூட்டிக் கொள்ளலாம். பல திறமைகளை வைத்துக் கொண்டு வீட்டில் முடங்கி இருக்கும் இல்லத்தரசிகளும், நூல் கண்டுகளால் கற்பனை யாய் பிணைத்துக் கொண்டு, தன்னைச் சுற்றி சின்ன வட்டங்களில் உழல்பவர்களும் என,எல்லோருமே இந்த கண்ணோட்டத்தில் சிறிதே சிந்தித்தால், வாழ்க்கை தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொள்ள முடியும். 
அரசாங்கமும், இன்னும் அதிகமாய் மனித வள ஆற்றலை மேம் படுத்தினால், நம் நாட்டின் வளர்ச்சியும் பெரிதும் மேம்படும்.
இது என் வாழ்க்கையில் நான் கற்ற, எனக்கு கை கொடுத்த அனுபவப் பாடமும் கூட பின்னொரு பகிர்வில் இதைப் பற்றி விவரமாய் எழுகிறேன் .
அன்புடன் என்றும்.
( வட்டி விகிதம், மூலதனம், வசந்தன், முகுந்தன் எல்லாம் ஒரு உதாரணத்திற்கு எழுதியது. பெருமதிப்பிற்குரிய,என் ஆசிரியர் பெயர் உண்மை.)

நன்றி : கூகுள் படங்கள் .

8 கருத்துகள்:

 1. இதோ வந்துட்டேன் படிச்சிட்டு வர்றேன் சார்

  பதிலளிநீக்கு
 2. அனுமனுக்கு அவன் பலமறிய வைத்தது ஜாம்பவான். ஒருவரின் திறனறிய உதவும் ஜாம்பவான்கள் தேவை. உங்கள் முகுந்தனுக்கும் வசந்தனுக்கும் வாய்த்தது போல. Your approach to the problem is laudable. Best wishes.

  பதிலளிநீக்கு
 3. நன்றிங்க தினேஷ்..தங்களின் பின்னூட்டம் என் மன அதிர்வுகளை பகிர்வதில் பெரும் ஊக்கம் அளிக்கிறது

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும்,ஊக்கம் அளிக்கும் கருத்துக்கும் .. நன்றிங்க மாணிக்கம்....

  பதிலளிநீக்கு
 5. Thanks G.M.B,sir..Its a great pleasure to hear your comments..I cherish them..thanks again..

  பதிலளிநீக்கு
 6. வாழக் கற்றுக்கொடுத்துள்ளீர்கள் தங்களது
  கட்டுரை மூலமாக. வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.. புவனேஸ்வரி ராமநாதன் .

  பதிலளிநீக்கு