மருதமலை முருகன்.
மே 17 ம் தேதி குளித்து முடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்த வாடகை ஊர்தியில் ஏறி, மயில் வாகனத்தான் அருள் பெற மருதமலை சென்றோம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததது. அறு நூறு படிகள் ஏற வேண்டுமோ?. என அஞ்சினோம். நல்ல வேளை கோவிலின் அடிவாரம் வரை வாகனம் செல்லும் வசதி பண்ணி யுள்ளார்கள்.மீதமுள்ள முப்பது படிகளில் ஏறியதே மூச்சு வாங்கியது.
அன்று குருப் பெயர்ச்சியும் கூட. நல்ல கூட்டம்.முருகப் பெருமானின் திவ்ய தரிசனம். வணங்கி, வழி பட்டு விடை பெற்றோம்.கோவில் வளாகத்திலேயே சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் சாப்பிட்டு, பசுக்களுக்கும் கொடுத்து விட்டு காலை பத்து மணி யளவில் அங்கிருந்து வெள்ளியங்கிரி மலையில் உள்ள இஷா தியான மையம் சென்றோம் .
தென் திருக் கைலாயம் எனப் படும் வெள்ளியங்கிரி மலை, சித்தர் களும், பல ஞானிகளும் வாழ்ந்த, வாழ்கின்ற புண்ணிய பூமி, என்கின்றனர். இங்கு சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள், அமைத்த தியானலிங்கம் தரிசிக்கச் சென்றோம். மிக அற்புதமான அனுபவம்.
எந்தவொரு குறிப்பிட்ட பாரம்பரியமும் சாராமல், ஆன்மீக அறி வியலை வழங்குகிற இடம். மிக நேர்த்தியானகட்டிடக் கலை அமைப்பு, நெறிப் படுத்தப் பட்ட பூசை முறைகள், சமய சார்பில்லாத தியான மண்டபம், சிமெண்ட், இரும்புக் கம்பிகள் இன்றி பண்டைய முறையில் பூமிக் கோளத்தின் வடிவில், மகோன்னதமாய் அமைக்கப் பட்டுள்ளது .
வெள்ளியங்கிரி மலை நீர், ஆகாய கங்கை போல் கொட்டி,சிலீரென்று நிலவறைத் தொட்டியில் வீழ்கிறது. இங்கு நுழையு முன், நீராடி அவர்கள் தரும் காவி உடை அணிந்து சுத்த பத்தமாய் உள்ளே செல் கிறோம். பெண்கள், அப்புறம் ஆண்கள் என்று, தனித் தனியாய் அனுமதிக்கிறார்கள். சில்லன்று மேலிருந்து சிதறி விழும் அருவி நீர், இருட்டில் மெலிதாய் மென்மையாய் சாளரம் வழி வரும்,சூரியக் கதிர்கள், நீரில் மூழ்கி இருக்கும் லிங்க தரிசனம். எல்லாம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
நன்றி :கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக