வருட இறுதியில்,
வசந்தம் வந்தது .
வந்தது. என்னுயிர்
நிற்பதும் நடப்பதும் ,
நினைவில்லை.
நிசமா?. கனவா?.
தெரியவில்லை.
வாங்கி வந்த சேலை கட்டி,
ஆரம் அணிந்தபோது,
கணவனின் கள்ளப் புன்னகை.
லேசானது நெஞ்சம்.
விடியும்போதேல்லாம் நாட்கள் ,
கணக்கெடுத்து கனக்கும்.
வருடமொன்று குறைந்ததென,
என்னை நானே ஒப்புக்குத் தேற்றி ,
கரை புரளும் கண்ணீரை அணை போட்டு,
விழியால், விடை கொடுக்கும் போது,
இன்னுமொரு, வருடமென்றான்.
மடை திறந்த வெள்ளமாய்,
மறுபடியும் நான் .......
காத்திருக்கிறேன் ......