வீரமா ?......விவேகமா ?.
நேர் கொண்ட,
நெஞ்சம் வேண்டும்.
நீதிக்கு மட்டும்,
அஞ்சல் வேண்டும்.
பதைக்கும் நெஞ்சு,
பாதகங்கள் பல கண்டு.
ஆயினும், அயலூர்
அந்நிய மண்ணில்,
அக்கரைச் சீமையில்,
அண்டிப் பிழைக்கையில்,
ஆகாதையா நம் வீரம்!.
அனுசரித்தல் நலம்.
அடுப்பெரிதல் நின்று போகும்.
அன்னைக்கு சிகிச்சை,
ஆபத்தில் முடிந்து போகும்.
அடுத்தடுத்த சிலவுகளுக்கு,
எடுத்தெடுத்து பணம் அனுப்ப,
எதிர் பார்ப்பீர், யாரை நீயும் ?.
விவேகமாய் காலம் கழித்து,
வெற்றியுடன் திரும்பி வாரும்.
வழிமேல் விழி வைத்து
வஞ்சியவள் காத்திருக்கா!.
நெஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
ஞாயிறு, 10 அக்டோபர், 2010
காத்திருக்கிறாள் .4...
வருட இறுதியில்,
வசந்தம் வந்தது .
வந்தது. என்னுயிர்
நிற்பதும் நடப்பதும் ,
நினைவில்லை.
நிசமா?. கனவா?.
தெரியவில்லை.
வாங்கி வந்த சேலை கட்டி,
ஆரம் அணிந்தபோது,
கணவனின் கள்ளப் புன்னகை.
லேசானது நெஞ்சம்.
விடியும்போதேல்லாம் நாட்கள் ,
கணக்கெடுத்து கனக்கும்.
வருடமொன்று குறைந்ததென,
என்னை நானே ஒப்புக்குத் தேற்றி ,
கரை புரளும் கண்ணீரை அணை போட்டு,
விழியால், விடை கொடுக்கும் போது,
இன்னுமொரு, வருடமென்றான்.
மடை திறந்த வெள்ளமாய்,
மறுபடியும் நான் .......
காத்திருக்கிறேன் ......
வசந்தம் வந்தது .
வந்தது. என்னுயிர்
நிற்பதும் நடப்பதும் ,
நினைவில்லை.
நிசமா?. கனவா?.
தெரியவில்லை.
வாங்கி வந்த சேலை கட்டி,
ஆரம் அணிந்தபோது,
கணவனின் கள்ளப் புன்னகை.
லேசானது நெஞ்சம்.
விடியும்போதேல்லாம் நாட்கள் ,
கணக்கெடுத்து கனக்கும்.
வருடமொன்று குறைந்ததென,
என்னை நானே ஒப்புக்குத் தேற்றி ,
கரை புரளும் கண்ணீரை அணை போட்டு,
விழியால், விடை கொடுக்கும் போது,
இன்னுமொரு, வருடமென்றான்.
மடை திறந்த வெள்ளமாய்,
மறுபடியும் நான் .......
காத்திருக்கிறேன் ......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)