வறுமையும் ..வெறுமையும்.
கனவுதான் எனது
நனவானது மகனால்.
வான் முட்டும் கட்டிடடம்,
வளமிக்க நாடு.
அளவில்லா செல்வம்,
அமெரிக்க தேசம்.
வாய்ப்புக்கள் தேடி,
வானத்தில் பறந்து,
கூடு விட்டுப் போயின,
குஞ்சுப் பறவைகள்.
கால பைரவரின்
கணக்கேடுகள் புரண்டதால்
மூச்சில் முனகலும்
முழங்காலில் ஆயாசமும்.
பிள்ளைகளின் வளமையால்
பணமிலை எனும் நிலை மாறி
வறுமையை வென்றிட்டேன்..இன்று
வெறுமையை வாங்கியதால்.....
நன்றி :கூகுள் படங்கள்.