செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

வறுமையும் ..வெறுமையும்.

வறுமையும் ..வெறுமையும்.

















கனவுதான் எனது 
 நனவானது மகனால்.
வான் முட்டும் கட்டிடடம், 
வளமிக்க நாடு. 
அளவில்லா செல்வம், 
அமெரிக்க தேசம்.



வாய்ப்புக்கள் தேடி, 
வானத்தில் பறந்து, 
கூடு விட்டுப் போயின, 
குஞ்சுப் பறவைகள்.

கால பைரவரின்
கணக்கேடுகள் புரண்டதால் 
மூச்சில் முனகலும் 
முழங்காலில்   ஆயாசமும்.

பிள்ளைகளின் வளமையால் 
பணமிலை எனும் நிலை மாறி 
வறுமையை வென்றிட்டேன்..இன்று
வெறுமையை வாங்கியதால்..... 
     
நன்றி :கூகுள் படங்கள்.

  

19 கருத்துகள்:

  1. பிள்ளைகளின் வளமையால்
    பணமிலை எனும் நிலை மாறி
    வறுமையை வென்றிட்டேன்..இன்று
    வெறுமையை வாங்கியதால்.....


    ..... ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள்......

    பதிலளிநீக்கு
  2. varumaiyai vendritten, indru verumaiyai vaangiyathaal.....hats off to you

    பதிலளிநீக்கு
  3. சகோதரி Chitra அவர்களுக்கு என் நன்றி ...

    பதிலளிநீக்கு
  4. திரு Umesh Srinivasan அவர்களுக்கு என் நன்றி...

    பதிலளிநீக்கு
  5. பிள்ளைகள் பிறக்கும்போது இல்லாத எதிர்பார்ப்புகள் அவர்கள் வளர்ந்த பிறகு வருகிறது. நிறைவேறும்போது மகிழ்ச்சி. மகன் தந்தை இருவர் பற்றிய குறள் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. திரு.G.M.B sir..
    வருகை, கருத்து, வாழ்த்து அனைத்துக்கும் என் நன்றிங்க. ..

    பதிலளிநீக்கு
  7. பிள்ளைகள் வளமையில் இருத்துவதுதான் பணி என்றிருந்து ,வெற்றி கண்டபின் ,
    வெறுமையை வாங்கினேன் என்ற ஏக்கம் ஏன்?

    பதிலளிநீக்கு
  8. நன்றிங்க goma ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் அதற்க்கு கொடுக்கப்பட்ட விலைகளை பற்றிய தாக்கம்.ஏற்றத்தில் மகிழ்வும் பிரிவில் துயரும் ..

    பதிலளிநீக்கு
  9. ஓ வறுமையை வெல்ல வெறுமையை வாங்க வேண்டும்.
    நல்ல‌ டெக்னிக்கா தெரியுதே :)

    பதிலளிநீக்கு
  10. வறுமையை வெல்ல நான் கொஞ்ச நாள் அரபு தேசத்தில் இருந்தேனுங்க.அப்போ கொஞ்சம் வெறுமை.இப்ப பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறு தேசத்திலே.பாதிப்போட பிரதிபலிப்பு.தங்கள் வருகைக்கு நன்றிங்க ..

    பதிலளிநீக்கு
  11. இது க‌ண்க‌ளை விற்று சித்திர‌ம் வாங்குத‌ல் தான்.அது
    ந‌ம் ர‌த்த‌ங்க‌ளோடு கூடி, குலாவி வாழும் வாழ்க்கையின் ருசி,
    அக்க‌றைச் சீமையில் சீமானாய், க‌ண் காணத‌ வாழ்வின் வ‌லி.
    வாழ்ந்து பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கும்,பார்த்த‌வ‌ர்க‌ளுக்கும் தான் புரியும் இது.
    (ஒரு வ‌ருட‌ம் கூட‌ ச‌வுதியில் காலந்த‌ள்ள‌ முடியா‌து திரும்பிய‌வ‌ன்)

    பதிலளிநீக்கு
  12. தனிமை ஒரு பெரிய கொடுமைங்க.இதெல்லாம் ரியாத்-ல் "பத்தா"எனுமிடத்தில், வெள்ளியன்று கூடுகின்ற நம்மவர் கூட்டமும்,சிங்கப்பூர் "லிட்டில் இந்தியா" வில் கூடுகின்ற "ஞாயிறு" களிலும் கண்கூடா பார்க்கலாங்க.வருகைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  13. ''கால பைரவரின்
    கணக்கேடுகள் புரண்டதால்
    மூச்சில் முனகலும்
    முழங்காலில் ஆயாசமும்''
    அருமையான ஆக்கம்.

    பதிலளிநீக்கு
  14. ''பிள்ளைகளின் வளமையால்
    ''பணமிலை எனும் நிலை மாறி
    வறுமையை வென்றிட்டேன்..இன்று
    வெறுமையை வாங்கியதால்.....''

    அருமையான ஆதங்கம் . ஒன்றைக் கொடுத்தால்தான் மற்றொன்று கிடைக்குமோ?
    வேறு வழியில்லைபோலும்.பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையே? அதை
    நேர்மையான வழியில் ஈட்டுவதற்கு சிலவற்றைத் தியாகம் செய்யத்தான் வேண்டியுள்ளது. கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. உற்சாகம் தரும் தங்கள் கருத்துக்கு ஒருமித்த உள்ள உணர்வுகளுக்கு வணக்கத்துடன் நன்றிங்க.வருகையில் மகிழ்கிறேன்.radhakrishnan சார் ..

    பதிலளிநீக்கு