உலகிற்கு உணர்த்தும் பாடம் ..
உறவின் பிரிவில்
ஊர்கூடி அழும் காக்கை.
மலர் நுகர்ந்து
மணக்கும் தேன், உறிஞ்சி
மகரந்தம் சேர்த்து
மறு உதவி செய்யும் தேனீ.
ஒன்றாய் இணைந்து
ஒழுங்கை உணர்த்தி
ஒருபோதும் ஓயாது
ஓடி ஓடிச் சேர்க்கும் எறும்பு.
உறவு, உதவி, உழைப்பு என, இவை
உலகிற்கு உணர்த்தும் பாடம்