செவ்வாய், 23 நவம்பர், 2010

உலகிற்கு உணர்த்தும் பாடம் ..

உலகிற்கு உணர்த்தும் பாடம் ..

உறவின் பிரிவில்
ஊர்கூடி அழும் காக்கை.

மலர் நுகர்ந்து
மணக்கும் தேன், உறிஞ்சி
மகரந்தம் சேர்த்து
மறு உதவி செய்யும் தேனீ.

ஒன்றாய் இணைந்து
ஒழுங்கை உணர்த்தி
ஒருபோதும் ஓயாது
ஓடி ஓடிச் சேர்க்கும் எறும்பு.

உறவு, உதவி, உழைப்பு என, இவை
உலகிற்கு உணர்த்தும் பாடம்

6 கருத்துகள்:

 1. பாடம் கற்பிக்க பல வழிகாட்டிகள். கற்கிறோமா என்பது கேள்வி.

  பதிலளிநீக்கு
 2. அய்யா தங்கராஜன் அவர்களுக்கு என் நன்றி

  பதிலளிநீக்கு
 3. அய்யா G.M.B அவர்களுக்கு என் நன்றி.
  கற்க நினைத்தால் கற்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 4. அருமை ஐயா

  உயிரற்று கிடக்கும்
  மரக்கட்டை கூட
  உதவ முன்வரும்
  நம் மனக்கட்டை
  திறப்பதற்கு
  சுயம் எனும்
  சாவி
  தொலைந்தால்
  மாறும்.............

  பதிலளிநீக்கு
 5. நன்றி தினேஷ். நன்றாகச் சொன்னீர்கள்.சுயம் என்னும் சாவியை அவ்வளவு சீக்கிரம் தொலைக்க முடியலையே.

  பதிலளிநீக்கு