மும்பைப் பயணம்
ஒதுக்கப் பட்ட விடுமுறை நாட்களை எங்களுடன் கழித்த பேரன், பேத்தியை பாட்டி வீட்டில் கொண்டு விட மும்பை புறப்பட்டோம்.
டிசம்பர் 13 ம் தேதி இரவு ரயில் ஏறி, தேதி அதிகாலை 03 -30 மணிக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்-ல் இறங்கி, புறநகர் ரயில் பிடித்து 'நெருல்' போன போது நேரம் காலை 06-00 மணி.
ரயிலில், சக பிரயாணியாய் ஒரு எலியாரும் கூடவே பயணிக்க, அனைவர் கவனமும் சோற்று மூட்டையில் தான். பஜ்ஜியில் இருந்து பனை நுங்கு வரை சாப்பிடகிடைத்தது.காப்பி, டீ என்ற பெயரில் அளவு குறைந்த, தரமில்லாத பானகங்களும் கிடைத்தன.வழக்கம் போல் சினேகிதத்தில்,நெருங்கி குசலம் விசாரித்து பெயர் கேட்காமல் பிரிந்து போனோம்.

"மும்பையில் ஆறு நாட்கள் தங்கியதில் "பாலாஜி மந்திர்",மற்றும் வாஷியில்,"இன் ஒர்பிட்",என்ற அங்காடிக்கு சென்றது தவிர, வீட்டிலேயே முடக்கம்.அந்த வருடத்தின் குறைந்த குளிரை மும்பை எட்டியதை, பத்திரிக்கைகள் சொல்ல என் சுவாசப் பைகளில் அதன் ரீங்காரம் கேட்டதும்,ஒரு காரணம். பேரன், பேத்தியை மும்பை கோதரிகளுடன் விட்டு தம்பதி சமேதராய்,நீண்ட நாள் ஆவலாய் காத்திருந்த ஷீரடிக்கு,ஸ்ரீசாய் பகவானின் திருவடி தரிசனத்திற்குசென்றோம்.