செவ்வாய், 25 ஜனவரி, 2011

மும்பைப் பயணம்

மும்பைப் பயணம்

ஒதுக்கப் பட்ட விடுமுறை நாட்களை எங்களுடன் கழித்த பேரன்,   பேத்தியை பாட்டி வீட்டில் கொண்டு விட மும்பை புறப்பட்டோம். 


டிசம்பர் 13 ம் தேதி இரவு ரயில் ஏறி, தேதி அதிகாலை 03 -30 மணிக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்-ல் இறங்கி, புறநகர் ரயில் பிடித்து 'நெருல்' போன போது நேரம் காலை 06-00  மணி. 

ரயிலில், சக  பிரயாணியாய் ஒரு   எலியாரும் கூடவே பயணிக்க, அனைவர் கவனமும் சோற்று மூட்டையில் தான். பஜ்ஜியில் இருந்து பனை நுங்கு வரை சாப்பிடகிடைத்தது.காப்பி, டீ என்ற பெயரில் அளவு குறைந்த, தரமில்லாத பானகங்களும் கிடைத்தன.வழக்கம் போல் சினேகிதத்தில்,நெருங்கி குசலம் விசாரித்து பெயர் கேட்காமல் பிரிந்து போனோம்.


"மும்பையில் ஆறு நாட்கள் தங்கியதில் "பாலாஜி மந்திர்",மற்றும்  வாஷியில்,"இன் ஒர்பிட்",என்ற அங்காடிக்கு சென்றது தவிர, வீட்டிலேயே முடக்கம்.அந்த வருடத்தின் குறைந்த குளிரை மும்பை எட்டியதை, பத்திரிக்கைகள் சொல்ல என் சுவாசப் பைகளில் அதன் ரீங்காரம் கேட்டதும்,ஒரு காரணம். பேரன், பேத்தியை மும்பை கோதரிகளுடன் விட்டு தம்பதி சமேதராய்,நீண்ட நாள் ஆவலாய் காத்திருந்த ஷீரடிக்கு,ஸ்ரீசாய் பகவானின் திருவடி தரிசனத்திற்குசென்றோம்.                



அடுத்த பகிர்வில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் .இப்போதைக்கு என் வணக்கம் .

12 கருத்துகள்:

  1. ரயிலில் சக பிரயாணியாய் ஒரு எலியாரும் கூடவே
    பயணிக்க, அனைவர் கவனமும் சோற்று மூட்டையில் தான். பஜ்ஜியில் இருந்து பனை நுங்கு வரை சாப்பிட கிடைத்தது.காப்பி ,டீ என்ற பெயரில்
    அளவு குறைந்த, தரமில்லாத பானகங்களும் கிடைத்தன.வழக்கம் போல்
    ரயில் சினேகிதத்தில்,நெருங்கி குசலம் விசாரித்து ,பெயர் கேட்காமல்
    பிரிந்து போனோம்.


    .... In a way, I miss all these "special" things. :-)

    பதிலளிநீக்கு
  2. ஐயா நலமா தங்கள் உடல் நலம் எப்படி இருக்கு ஐயா தங்கள் வருகையில் சந்தோஷாமாக உள்ளது மனம் அம்மாவிடமும் ஆசி பெற்றுக்கொண்டேன் தங்கள் இருவரின் ஆசிர்வாதம் என்றும் எமக்கு வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    பதிலளிநீக்கு
  4. எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க அய்யா

    பதிலளிநீக்கு
  5. சகோதரி Chitra அவர்களுக்கு என் நன்றி..

    பதிலளிநீக்கு
  6. திரு.தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றி... நல்ல இருக்கேனுங்க.எங்கள் அன்பும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.தாங்களும் உடல்,உள்ளம் நலம் பேணவும்..

    பதிலளிநீக்கு
  7. திரு.வைகறை அவர்களுக்கு என் நன்றி.தங்கள் நதிக்கரைக்கு வந்து மழையில் நனைந்து, சிறிது தேநீர் பருகினேன்.மீண்டும் வருவேன்.இணைய இதழுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்...
    என்றும் அன்புடன்.

    பதிலளிநீக்கு
  8. நெருடலான நினைவுகளை,கரை சேரா அலை மூலம் மிதக்க விடுகின்ற அரசன்(ர்)க்கு என் நன்றி....வருகையில் மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. சில காலம் உங்களை வலையில் காணாது,காரணம் அறியாது தவித்தவர்களில் நானும் ஒருவன். இப்போது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. நெரூலில் ஐயப்பன் கோயிலும், சனீஸ்வரர் கோயிலும் ரொம்ப விசேஷம். டோம்பிவிலி பாலாஜியை பாத்தா சாட்சாத் திருப்பதி வெங்கி மாதிரியே இருப்பார். அடுத்ததடவை இதெல்லாம் மிஸ்பண்ணாம தரிசியுங்க :-)

    பதிலளிநீக்கு
  11. நன்றிங்க G.M.B அய்யா ..விடுமுறையில் காணமல் போனேன்.மடிக் கணினியும் சிறிது கோளாறு செய்ததில் பகிர்வில் சுணக்கம்.அன்பிற்கும் நட்புக்கும் என் வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  12. அமைதிச் சாரல் அவர்களுக்கு என் நன்றிங்க.
    கட்டாயம் நீங்க சொன்ன எல்லா இடத்தையும் அடுத்த முறை பார்த்துவிடுகிறோம் Thanks a lot ..

    பதிலளிநீக்கு