திருமண நாள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமண நாள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஜூன், 2012

ஆலய தரிசனம் .2.

மருதமலை முருகன்.

மே 17 ம் தேதி குளித்து முடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்த வாடகை ஊர்தியில் ஏறி, மயில் வாகனத்தான் அருள் பெற மருதமலை சென்றோம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததது. அறு நூறு படிகள் ஏற வேண்டுமோ?. என அஞ்சினோம். நல்ல வேளை கோவிலின் அடிவாரம் வரை வாகனம் செல்லும் வசதி பண்ணி யுள்ளார்கள்.மீதமுள்ள முப்பது படிகளில் ஏறியதே மூச்சு வாங்கியது.