வழக்காடு மன்றங்கள் ..வழக்கும் ..தீர்ப்பும்.
சுப்ரமணிய புரம், கோரிப் பாளையம் அங்காடித்தெரு வழியாய் வெய்யிலில் நடந்து சென்ற பொழுது வழக்கு எண் :18 / 9 பட விளம்பர சுவரொட்டி பார்த்தேன்.
எளிமை யாய், எல்லோர் கவனமும் சிந்தாமல், சிதறாமல் கவரக் கூடிய வகையில், சமூக அவலங்களை தோல் உரித்து காட்டுகின்றன. வித்தியாச மான, இந்தப் படங்கள்...இவை எழுப்பும் கேள்விகள்..திராணியற்ற நம் நெஞ்சிற்கு, தருகின்ற சவுக்கு அடிகள். பார்த்து, பதை பதைத்து, பின் "இதுவும் கடந்து போகும்", என்கிற பாமரனாய் நாம்.
திக்கெட்டும் திரும்பிப் பார்க்க, பேச, வைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தில் தமிழ்த் திரையுலகம். ' திடுக் ', என்று திகைத்து எழுந்து நிற்க வைக்கிறது.

அங்காடித் தெருக்கள் இல்லாத உலகமே இல்லை எனத் தோன்றுகிறது. இனம் நிறம், மொழி, தூரம்,பரிணாமங்களின் வேறுபாடு.அவ்வளவு தான். ஏழ்மை, எதிர்த்து நிற்க இயலாமை, சாண் வயிற்றுக்கு ஊண் இட, விரும்பியோ விரும்பாமலோ பொந்துக்குள் புதைகின்ற மனிதர்கள், சமாதியாகின்ற வாழ்க்கைகள். அவ்வளவு தான். நிரம்புகின்றன, கொத்தடிமைக் கூடாரங்கள்.
கூடா நட்பு, நம்பிக்கையற்ற பெற்றோர், அதிகார ஆணவங்கள் அவற்றின் துஷ் பிரயோகங்கள், மனிதத்தை நேயமின்றி கசக்கிப் பிழியும் சுயநலமிகள்..
இப்படி பல சமூக அவலங்களை சத்தமின்றி படமெடுத்து, சாட்டையால் சாடுகின்றனர். துண்டாடும் அரிவாளும், தூள் பறக்கும் அடி தடிகளும் தலை காட்டுதல், இன்னமும் தப்பவில்லை. ஆயினும், புதிய வரவேற்கத் தக்க மாற்றம் .