வயசான வாலிப சிந்தனை ..
குத்தாட்டம் புடிக்குது,
குந்தித்தான் பாக்க முடியல,
குழந்தை குட்டியோட,
கூடிப் பார்க்க, பெரும்
கூடிப் பார்க்க, பெரும்
குழப்பமாயிருக்குது.
கண்டபடி கட்டிபுடி, வைத்தியம்
கமல் தான் சொன்னாரு.
கட்டிகிட்ட பொண்டாட்டி
கற்காலக்காரி,கலிகாலம் இல்லே.
கடல் தாண்டுனா,இது சாத்தியம்.
முத்தக் காட்சிக்கு, சும்மாவேணும்
முகம் சுளிக்க வேண்டியிருக்கு.
வயசு ஆனதாலே, மனசு
வாலிப சிந்தனை, இந்த வயசிலே
வாலிப சிந்தனை, இந்த வயசிலே
வேண்டாமின்னு.இடிக்குது.
நாயம் சொல்லுங்க பெருசுகளே.
நாமெல்லாம் என்ன செய்யறது.
( என்னைப்போல் வயதான என் நண்பரின் புலம்பல்..)