வயசான வாலிப சிந்தனை ..
குத்தாட்டம் புடிக்குது,
குந்தித்தான் பாக்க முடியல,
குழந்தை குட்டியோட,
கூடிப் பார்க்க, பெரும்
கூடிப் பார்க்க, பெரும்
குழப்பமாயிருக்குது.
கண்டபடி கட்டிபுடி, வைத்தியம்
கமல் தான் சொன்னாரு.
கட்டிகிட்ட பொண்டாட்டி
கற்காலக்காரி,கலிகாலம் இல்லே.
கடல் தாண்டுனா,இது சாத்தியம்.
முத்தக் காட்சிக்கு, சும்மாவேணும்
முகம் சுளிக்க வேண்டியிருக்கு.
வயசு ஆனதாலே, மனசு
வாலிப சிந்தனை, இந்த வயசிலே
வாலிப சிந்தனை, இந்த வயசிலே
வேண்டாமின்னு.இடிக்குது.
நாயம் சொல்லுங்க பெருசுகளே.
நாமெல்லாம் என்ன செய்யறது.
( என்னைப்போல் வயதான என் நண்பரின் புலம்பல்..)
:-) நல்லாயிருக்குங்க கவிதை!!
பதிலளிநீக்குவருகைக்கு வணக்கம் நன்றிங்க.எஸ்.கே..
பதிலளிநீக்குஇருபதிலே உரசினாலே கிளர்ச்சி
பதிலளிநீக்குமுப்பதிலே மோகமெனும் மாயப்பிடியில்..
நாற்பதிலே முத்தமிட்டாலே மொத்தமும்...
ஐம்பதிலே கைகோர்த்து நடக்க வேண்டும்...
அறுபதிலே பார்த்தாலே பற்றிக் கொள்ளும்..
அதிசயக் காதலிது...
ஐம்பதிலும் ஆசை வரும்..
பதிலளிநீக்குஅந்த ஆசையிலும் பாசம் வரும்..
இதில் அந்தரங்கள் கிடையாதையா..
நாள் செல்ல.. நாள் செல்ல.. சுகம்தானையா..
உள்ளம் விழையும். உடல் ஒத்துழைக்காது. பாவம் பெரிசுகள்
பதிலளிநீக்குநன்றிங்க.எழும் சிந்தனைகளைப் பற்றிய கருத்து மட்டுமே.மற்றபடி நீங்கள் சொல்றது ரொம்பவும் உண்மை.
பதிலளிநீக்குThank you ma Asha..
பதிலளிநீக்குரொம்ப நன்றிங்க வெங்கட் ..
பதிலளிநீக்கு