செவ்வாய், 13 டிசம்பர், 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8

நாளைய தலைமுறை ....நமது செல்வங்கள்.


வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம் பற்றி கவலை அடையத் தொடங்கினர் .பள்ளியை பாதியில் விட்ட முகுந்தனும், முதுகலை பட்டம் பெற்ற வசந்தனுக்குமே தத்தம் சிறார்களை வளர்க்கும் விதம் சரியா ? என்ற ஐயப்பாடு.
வழக்கம் போல் தம் ஐயம் தெளிய, தங்கள் ஆசிரியர் திரு. கல்யாணராமனைத் தேடித் போயினர். கால ஓட்டத்தில் கல்யாணராமன் முதுமையின், மூத்த நிலையில் இருந்தார்.
            பழைய மாணாக்கர்களின் வருகையில் மனம் மகிழ்ந்தார்.நெடிது நேரம் அளவளாவிய பின், ஆசிரியர் கல்யாணராமன், "வெகு வேகமாய் வளர்ந்து வரும் நவீன உலகில் பெற்றோர் குழந்தைகளியிடையேயான தலைமுறை இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது..ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட மலர் போல்.. ..இடம்,பொருள், வசதி,கல்விக்கான வாய்ப்பு, வளரும் சமுதாய சூழல், பெற்றோர்களின்  ஈடுபாடு,பள்ளியின்  தரம், ஆசிரியர் என பன்முக பங்களிப்பில்இம்மலர்  பரிணமிக்கிறது.மாதா,பிதா, குரு என்ற தத்துவம், குழந்தை வளர்ப்பின் கால கட்டங்களே.
                  "குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதா? சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதா ?"எனபது தொன்று தொட்டே எழுப்பப்படும் கேள்வி.சரியான முடிவு சொல்ல இயலா  தர்க்கம். பாமரர் படித்தோர் என பெற்றோர் பலதரப்பட்டவர். "எது சரி? ", என எப்படி முடிவு செய்ய இயலும்?.இதற்க்கு சரியான தீர்வு எது?.
 காலம் காலமாய் எல்லோரும் கேட்டு  வரும் இக்  கேள்விக்கு விடை என்ன என்ற விவாதம், ஒரு முறை பன்னாட்டு அறிஞருக்கு இடையே நடந்ததாம். அந்த பட்டி மன்றத்தின் இறுதித் தீர்வு "உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ  புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை  களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.
"குழந்தை வளர்ப்பில் நம் தாய் தந்தையே நமக்கு முன்னோடி,மேலும் குழந்தைகள் பெற்றோர்களுடன் தம் எண்ணங்களை சுதந்திரமாய்  பகிர்ந்து கொள்ளும் அளவு தோழமையுடன் வளருங்கள் ",என முடித்தார் ஆசிரியப் பெரு மகன்.
நன்றி : கூகுள் படங்கள்             

12 கருத்துகள்:

  1. சரியான பதிவு .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க அரசன்...

    பதிலளிநீக்கு
  3. Dear Kalidos, Pleasantly surprised seeing you back in action. Earlier when I saw your notings in my blog Iwas expecting you more often. For the present my comment is GOOD. PLEASE CONTINUE WRITING. REGARDS.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா

    ///உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.///

    என் மனதில் உள்ள எண்ணங்களும் இவைதான் வருங்காலம் பற்றி யோசிக்கும் பொழுது

    சிறு வயதில்

    கிட்டியதும் கிட்டாததும்
    எட்டியதுவும் எட்டா கனியானதும்
    கனவானதும் காவியமானதும்
    கட்டிய சூழலையுணர்ந்தோம்
    அவையுணர்த்தும் பாடம் படித்து
    திருத்தம் செய்ய எதிர் வரும்
    துளியானது செழிக்கும்

    என் மனதில் பட்டவை ஐயா....

    சரியாக கூறியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  5. My dear G.M.B..sir,Its great to hear from you..will be back again to share my thoughts with you..what could be more delightful than that.Thanks for uplifting my spiritss..warm regards

    பதிலளிநீக்கு
  6. என் ஆத்மார்த்த அன்பு நண்பர் தினேஷ் அவர்களுக்கு நாளுக்கு நாள் புடம் போட்டதாய் மின்னுகின்றன உங்கள் கவிதைகள் ..
    வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த என் நன்றிகள் ..என்றும் அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. ஐயா வணக்கம்.என் பதிவுக்கு வந்து வாழ்த்துத் தந்தீர்கள் நன்றி !

    ஆதங்கம்,வேதனை என உங்கள் எண்ணங்களைத் தமிழால் நிரம்பியிருக்கிறீர்கள் பக்கங்களை.

    இந்தப் பதிவுகூட இன்றைய இளம் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாயிருக்கும்.இன்னும் எழுதுங்கள்.வாழ்த்தும் பாராட்டும் !

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...ஹேமா

    பதிலளிநீக்கு
  9. குழந்தை வளர்ப்பு இக்காலத்தில் மிகப்பெரிய சவால். இதில் பாமரர்,படித்தவர் என்று பேதமின்றிப் பலரும் சறுக்கக் காரணம், தமது கனவுகளைப் பிள்ளைகள் தோள்களில் சுமக்க வைக்க நினைக்கும் தவறான சிந்தனை.நீண்ட நாட்களின்பின் உங்கள் வலைப்பதிவைக் காண மிக்க மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்கும் நன்றிங்க உமேஷ் ..

    பதிலளிநீக்கு
  11. ''காலம் காலமாய் எல்லோரும் கேட்டு வரும் இக் கேள்விக்கு விடை என்ன என்ற விவாதம், ஒரு முறை பன்னாட்டு அறிஞருக்கு இடையே நடந்ததாம். அந்த பட்டி மன்றத்தின் இறுதித் தீர்வு "உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.''
    அருமையான கருத்து, அருமையான தீர்ப்பு
    வழக்கையும் தொடுத்து தீர்ப்பும் வழங்கிவிட்டீர்கள்
    நன்றி நணபரே

    பதிலளிநீக்கு
  12. அன்பிற்கு உரிய திரு .radhakrishnan அவர்களுக்கு,
    வழக்கும் தீர்ப்பும் என்னுடையது இல்லைங்க.உண்மையாய் நடந்த வாதம்.எப்போதோ படித்தது.அதன் தாக்கம் ..நன்றிங்க

    பதிலளிநீக்கு