சனி, 19 பிப்ரவரி, 2011

கருவேல மரமும் ..கரும்பும்


கருவேலம் சிரிக்க, கண் கலங்கும் கரும்பு. 

கரும்பை பார்த்து கருவேலம் சிரிக்குது
சீமைக் கருவேலம்
சீந்துவோர் இல்லையென்றார்.
உண்ணத் தித்திக்கும் கரும்பு
ஊருக்கெல்லாம் சுவை என்றார்.
ஊருக்கு உலையான நான்
உழவனுக்குப் பணம் ஆனேன்.
ஊருக்கு சுவையானாலும்,
உழவனுக்கு சுமையானாய்!.நீ.

கண் கலங்குது கரும்பு. 
கருவேலம் சிரிக்குது.

(ஒரு டன் கரும்பு விலை  ரூ .1940-  ஒரு டன் சீமைக் கருவேல விறகு விலை ரூ3000- என்கிறது  தினமலர் நாளேட்டின் 17/02/2011  தேதியிட்ட செய்தி ) 

நன்றி : தினமலர்,கூகுள் படங்கள்.


23 கருத்துகள்:

 1. இந்நிலை தொடர்ந்தால் கன்னலும் நெல்லும் காணாமல் போய் கருவேலமும் கள்ளியும்தான் மிஞ்சும்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு. சம்மந்தபட்டவர்களின் காதில் விழுமா?

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றிங்க..தமிழ் உதயம்.
  இந்த நிலைமை கவலையை தருகிறதுங்க

  பதிலளிநீக்கு
 4. திரு g.m.b. அய்யாவுக்கு நன்றி. இந்த நிலைமைக்கு தான் சென்று கொண்டு இருக்கிறோமோ என்ற கவலையை
  தருகிறதுங்க

  பதிலளிநீக்கு
 5. சகோதரி லக்ஷ்மி அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு
 6. காலம் அப்படித்தான் இருக்கிறது இப்போது. நல்லதுக்கு விலை குறைவு. கெட்டதுக்குத்தான் விலை அதிகமாக இருக்கிறது. கரும்பு கருவேல விறகில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்தான்.

  பதிலளிநீக்கு
 7. திரு ஹரணி அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 8. திரு தங்கராஜன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

  பதிலளிநீக்கு
 9. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 10. ஆதங்கம் நிறைந்த பதிவு!!

  வருகை தாருங்கள் நந்தலாலா இணைய இதழுக்கு!!

  பதிலளிநீக்கு
 11. மிக்க நன்றிங்க எஸ்.கே.
  எழுதியதை பகிர்ந்து கொள்வதும்,அதனைப் பற்றிய தங்கள் முன்னோட்டமும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.உபயோகமாய் இன்னும் எழுத வேண்டும்
  என்ற ஊட்டத்தையும் அளிக்கிறது.மீண்டும் நன்றி....

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றிங்க நந்தலாலா.தங்களின் இணைய இதழுக்கு என் வாழ்த்துக்கள்.விரைவில் வருகிறேன் தங்களை சந்திக்க.
  என்றும் அன்புடன்.

  பதிலளிநீக்கு
 13. மிகச் சரியாக சொன்னீர்கள். எங்கள் சர்க்கரை ஆலைக்கு சில விவசாயிகள் கரும்பு சப்ளை செய்வதை விட்டு பாய்லருக்கு கருவேல விறகு அனுப்புகிறார்கள். நல்ல லாபம் என்கிறார்கள். என்ன செய்வது நாங்கள். கருப்பு விலை ஏற வேண்டும் ஆனால் சர்க்கரை விலை ஏறக்கூடாது.மின்சாரம் மற்றும் எரிசாராய உற்பத்தியால் தான் தனியார் சர்க்கரை ஆலைகள் இன்னும் மூடப்படாமல் இருக்கின்றன. மூடப்படாமல்

  பதிலளிநீக்கு
 14. விலையைப் பற்றி பேசி மட்டும் என்ன சார் செய்யிறது. விவசாய வேலைக்கு யாரும் வர்ரதேயில்ல. நூறு நாள் வேலை திட்டத்துல 1 மணி நேரம் வேலை செஞ்சா 100 ரூவா குடுக்கறாங்களாம். தோட்ட வேலைக்கு வந்தா 6, 7 மணி நேரம் வேலை செய்யச்சொல்றாங்களாம்.

  கரும்பு பயிரிட்டா களை பறிக்கனும், உரம் போடனும், தண்ணி பாய்ச்சனும்...இப்படி நெறய வேலைங்க.
  கருவேலம் பயிரிட்டா அந்தமாதிரி தொல்லையான வேலையில்ல பாருங்க. அதான்!

  வேலைக்கு வேற ஆள் கெடைக்கிறதில்ல. வேற வழி இல்லாம ... வெறகையே பயிரிட வேண்டியதா போச்சி.

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சிவகுமாரன் ...

  பதிலளிநீக்கு
 16. நாட்டு நடப்பை.. உண்மையச் சொன்னீங்க ..
  திரு சத்திரியன் அவர்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ...

  பதிலளிநீக்கு
 17. கரும்பின் விலைக்கும்,சீமைக்கருவேலையின் விலைக்கும் இருக்கும் வித்தியாசமே மனிதவாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ..திரு.விமலன்

  பதிலளிநீக்கு
 19. கவிதையும் கருத்தும் நெஞ்சைத் தொடுகின்றன.
  அரிசியோ இலவசமாககஃ கிடைக்கின்றது.ஏன் கடுமையான( விவசாய)வேலையைச் செய்ய வண்டும்.
  நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஒருமணி நேரம் வேலை
  செயதால் இதரச் செலவுகளுக்கு ஆயிற்று.இலவச டி.வி.உழைப்பின் மதிப்பைக் கெடுத்தாயிற்று.ஒரு தலைமுறை விவசாயத்திலிருந்து விலகிவிட்டால்
  பின் அந்த வேலையைச் செய்ய அநுபவம் போய்விடும் என்று கூறுகிறார்கள்எதிர்காலம் என்னவாகப் போகிறதோ?
  பகிர்வுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 20. அன்பிற்கு உரிய திரு .radhakrishnan அவர்களுக்கு,
  வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றிங்க

  பதிலளிநீக்கு