ஞாயிறு, 12 டிசம்பர், 2010

வீரமா ?......விவேகமா ?.

வீரமா ?......விவேகமா ?.  

நேர் கொண்ட,
நெஞ்சம் வேண்டும்.
நீதிக்கு மட்டும்,
அஞ்சல் வேண்டும். 
பதைக்கும் நெஞ்சு,
பாதகங்கள் பல  கண்டு.

ஆயினும், அயலூர் 
அந்நிய மண்ணில், 
அக்கரைச் சீமையில், 
அண்டிப் பிழைக்கையில், 
ஆகாதையா நம் வீரம்!.
அனுசரித்தல்  நலம்.

அடுப்பெரிதல் நின்று போகும். 
அன்னைக்கு சிகிச்சை, 
ஆபத்தில் முடிந்து போகும்.
அடுத்தடுத்த சிலவுகளுக்கு, 
எடுத்தெடுத்து பணம் அனுப்ப, 
எதிர் பார்ப்பீர், யாரை நீயும் ?.

விவேகமாய் காலம் கழித்து, 
வெற்றியுடன் திரும்பி வாரும்.
வழிமேல் விழி வைத்து 
வஞ்சியவள் காத்திருக்கா!.   

9 கருத்துகள்:

  1. மிக அருமை..
    பிழைக்க வந்த ஊரில்..
    துஷ்டனை கண்டால் தூர விலகு
    என்று பின்பற்றி...வந்த நோக்கம்..
    சிறப்பாக நிறைவேற்றி...சிலபல..
    மென்மையான அனுபவங்களை
    எடுத்து செல்வதே சால நன்று ..

    பதிலளிநீக்கு
  2. அக்கரை சீமையிலே அண்டிப் பிழைக்கையிலே அனாதைகளாகவே இருப்பவர்க்கு விவேகம் தான் தேவை. நல்ல சிந்தனை. வாழ்த்துகல்

    பதிலளிநீக்கு
  3. அக்கரைச் சீமையிலே அண்டிப்பிழைப்பவர் அனாதைகள் போலத்தான். அவர்களுக்கு வேண்டியது விவேகமே. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா

    எமக்காக படைத்த வரிகளில் நனைகிறேனே
    அயல் நாட்டு வாழ்க்கையையா
    சினம் கொள்ளா உள்ளமிது
    சிறகடித்து பறக்கிறேனே
    சிரகொடிக்கும் வேடனிடம்
    சினம் கொள்ளல் ஆகாதென்று
    சீரான வாதத்தில்
    சிந்தித்து சாதிக்க
    சம்மதமே என்னுள்ளும் ..............

    பதிலளிநீக்கு
  5. மிக மிக நன்றிங்க G.M.B அய்யா ..

    பதிலளிநீக்கு
  6. நன்றிங்க தினேஷ் ..சாதுரியமா காரியங்களை சாதிக்கலாங்க.நாம் அடையவேண்டிய குறிக்கோளை முதன்மைப் படுத்தி மற்றதைப் புறம் தள்ளுங்க.
    உங்களுக்கு தெரியாதது இல்லை..அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. எல்லா வளங்களும் நம்மில் இருக்க இங்கு இருப்பதை வெளிநாட்டானுக்கு கொடுத்து விட்டு நாம பொழப்புக்கு வெளியில போய் கையேந்த வேண்டிய அவலத்தை நல்லாவே சொல்லி இருக்கீங்க . மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிக நன்றிங்க தமிழ்க் காதலன்...

    பதிலளிநீக்கு