சனி, 29 ஜனவரி, 2011

ஷிர்டி பகவான் பாபா தரிசனம்

ஷிர்டி பகவான் பாபா  தரிசனம்


   
மும்பை 'நெருல்' இல் இருந்து டிசம்பர் 20-ம் தேதி புறப்பட்டோம்."தாதர்", போகும் வழியில் "குர்லா", ரயில் நிலையத்தில் இறங்கிய ஜனத் திரளில், என் மூக்குக் கண்ணாடி எகிறி பறந்து போனது. பிளாட்பாரத்தில் விழுந்த கண்ணாடி மிதிபட்டு நூறாகிப் போனது.கண்ணிருந்தும் கண்ணாடியில்லாமல் அரைக் குருடன் ஆனேன். மேலும் மாற்றுக் கண்ணாடி பத்திரமாய் சென்னையிலே இருப்பது பொறி தட்ட, கண்ணில் கம்பளிப் பூச்சிகள் அப்போதே ஊர ஆரம்பித்தது.

இரவு 10 மணிக்கு ரயில் ஏறி ஷிர்டியை மறுநாள் அதிகாலை 0430மணிக்கு சென்றடைந்தோம். ஸ்ரீ சாய் பகவானுக்கான முதல் ஆரத்தி நேரம் அது."மிஸ்",பண்ணி விட்டோம்.நேராக ஹோட்டல் சென்று குளித்து விட்டு 0630 க்கு வரிசையில் நின்று 0730 மணிக்கு பகவான் தரிசனம் முடித்தோம்.


  


அங்கிருந்து நாசிக் வழியாக "திரும்பகேஷ்வர்",சிவாலயம் சென்றோம். இது ஜ்யோதிர்லிங்க ஸ்தலத்தில் ஒன்றாகும். பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என மும்முகம்கொண்டவராய் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் பிரம்மகிரி மலையடி வாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.பக்தர்கள் கூட்டம்அலை மோதியது. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம், வரிசையில் நின்று சிவ தரிசனம் செய்தோம்.


பின்னர் நாசிக் திரும்பிய போது,சாயம் காலம் நான்கு மணியாகி விட்டது. அங்கு ஸ்ரீராமன் சீதை, லக்ஷ்மணன் கூட சில காலம் வசித்ததாகவும், இராவணன், சீதா பிராட்டியை இங்கிருந்து தான், இலங்கைக்கு கடத்தியதாகவும், புராணம்.

மீண்டும் மற்றவை அடுத்த பகிர்வில்..

நன்றி: கூகுள் படங்கள்.
                                        

6 கருத்துகள்:

 1. ஐயா மூன்று மணிநேரம் காத்திருந்து அவரை தரிசித்து அவரருள் எங்கும் பரவ உங்கள் மூலம் பதிவை சமைத்து எங்களுக்கும் காட்சி கிடைக்கப்பெற வழியமைத்த அவன் பாதம் சரணடைகிறேன்

  பதிலளிநீக்கு
 2. ஆலய தரிசனங்கள் மனதுக்கு சாந்தியும் நிம்மதியும் தரவேண்டும்.கண்ணாடிக்கு என்ன செய்தீர்கள் ?

  பதிலளிநீக்கு
 3. நண்பர் தினேஷ்குமார் அவர்களுக்கு நன்றி.நாளுக்கு நாள் தங்கள் பகிர்வுகள் பொலிவு கூடுகின்றன.
  மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 4. திரு G.M.B sir அவர்களுக்கு நன்றி.நம்முடைய அகண்ட பாரதம், ஆலயங்கள்,தொன்மையான நம் பாரம்பரியம் எல்லாவற்றையும் தாமதமா பாக்குறோம் என்ற ஆதங்கம்.ஆலயங்களுக்குள் சென்றாலே மனதில் அமைதியும் சாந்தமும் தான்.புது பயணங்களின் முடிவில் அசை போட ஆயிரம் சிந்தனைகள்.ஒரு பெரும் மனத் திருப்தி. கனிவு கலந்த தங்கள் விசாரிப்புக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.அன்புடன்

  பதிலளிநீக்கு
 5. ஷிர்டிக்கு இரவே சென்று தங்குதல்தான் நல்லது. நாங்கள் அவ்வாறு செய்து காலை இரண்டு மணிக்கு கோயில் சென்று அருமையாக ஆரத்தி தரிசித்தோம்.

  த்ரயம்பகேஷ்வரிலும் நீங்கள் சொல்வது போல் பலமணிநேரம் காத்திருந்து நல்ல தரிசனம். கண்ணாடியில்லாமல் கஷ்டப் பட்டிருக்கிறீர்களே? சோதனைதான்

  படங்கள் அருமை.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. தங்கள் கருத்துக்கு நன்றிங்க .radhakrishnan சார் ..

  பதிலளிநீக்கு