ஞாயிறு, 29 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .7


சுத்தம் சுகம் தரும் ..

நூறு எனபது ஒரு நல்ல எண்.எண் கணிதப்படி இதன் கூட்டுத் தொகை ஒன்று .ஒளி தந்து உலகை ரட்சிக்கும் சூரிய பகவான் இந்த எண்ணுக்கு அதிபதி .சகல் ஜீவ ராசிகளும்   தோன்றக் காரணமாய் இருக்கும் காரண கர்த்தா. அவரின்றி அகிலத்தில், ஓர் அணுவும் இல்லை .

பொதுவாகவே  நூறு எனபது ஒரு மைல் கல். ஒரு அளவீடு. குறிக்கோள்களை எட்டிட பலரும்  அமைத்துக் கொள்ளுகிற எல்லைக் கோடு .மேலும் எந்த ஒரு அரசு பதவி ஏற்றாலும் முதல் நூறு நாள், தெம்பா அறிக்கை விடுகிற கால கட்டம். அப்புறம் வம்பெல்லாம் , தானே வந்து சேரும் ,எனபது, இந்த கட்டுரைக்கு அவசியமில்லாத விஷயம் .


முன்னாடியெல்லாம் ஒரு திரைப்படம் நூறு நாள் தொடர்ந்து ஓடிச்சுன்னா ,பெரிய விழா எடுப்பாங்க .இப்பல்லாம் 100 திரை அரங்கில் ஒரு காட்சி ஓடினாலே, விமரிசையாய் கொண்டாடி விடறாங்க. இதெல்லாம் எதுக்கு இப்போ ன்னு ,இந்த பதிவை படிக்காம ஓடலாம்னு தோணும் .கொஞ்சம் இருங்க! .

இது என்னுடைய நூறாவது பதிவு என்பதை மிகத் தோழமையோடு வணங்கி சொல்லிகிறேனுங்க .வேதாளம் கதை சொல்லி, விடை கேட்குமாம் ராஜா விக்ரமாதித்தனிடம் .  ஒவ்வொரு முறையும் அவருடைய   சரியான பதிலால் திருப்தி அடைந்த வேதாளம் ,திரும்பவும் முருங்க மரத்திலே ஏறிக்குமாம். நான் எழுதுகிற, ஒவ்வொரு பதிவும், எனக்கு பிடிச்சதாலே , நான் மீண்டும் மீண்டும் எழுதுறேன். எழுத்துக்கும் மனசுக்குமான முடிச்சு .

உங்களுக்கெல்லாம் புடிக்குதோ, இல்லையோ. என்னுடைய பதிவுகள் ஒரு பிரசவம் மாதிரி . சுருங்கச் சொன்னா... தாய்,சேய் ஜீவ மரணப் போராட்டம். வரப் போற உயிருக்கும், தரப் போற உயிருக்கும் தொப்புள் கொடி பந்தம்.இவ்வளவு கஷ்ப் பட்டு   இந்த அம்மா புள்ளைய பெக்க, அப்பா கர்ரு இனிப்பு கொடுதிக்கிட்டு இருப்பாரு,அலம்பலா,நோவாமே.

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சுங்க .இருந்தாலும் தன்   புள்ளையை பார்த்து," நல்லா   இருக்குன்னு!, மத்தவங்களும்  சொல்ல மாட்டாங்களா ?", அப்படின்னு நினைக்கிறது தாயுள்ளம் ,இது உலக நியதி, முற்றிலும் இயற்கைங்க .மேலும் இந்த விஷயத்திலே எனக்கு கட்டுப் பாடா இருக்கத் தெரியலைங்க. அதுவும்  நான் இப்போ இருக்கிற நாட்டிலே, நெறைய குழந்தை பெத்தா நிறைய பணம்,வசதி எல்லாம்  தராங்க. இல்லாதவங்களுக்கு தான் தெரியும், இந்த அருமை இல்லைங்களா !. 

எனக்கு இந்த நூறாவது குழந்தை பிறக்கிறதை ரொம்பவும் விமரிசையா கொண்டாடணுமின்னு ,என் உள்ளம் ஏங்கிச்சு.       சூப்பர் ஸ்டார், உலகநாயகன் எல்லாம் ரொம்ப பிஸி .அப்புறம் என்னுகிட்டே இருக்கறது, ஒரு மடிக் கணினி வசதி தாங்க. அப்புறம் சுத்தம்...சுகம்...தரும்.. அப்படின்னு ஒரு பாசிடிவான   தலைப்பில் எழுதப் போறேங்க. என்ன பண்ணலாம் ?.

அய்யா சாலமன் பாப்பையா மாதிரி எனக்குள்ளே பட்டிமன்றக் கேள்விகள் .சதுரங்க ஆட்டத்திலே ஆடுற திரு.விஸ்வநாதன் ஆனந்து , முன்னாடி இருந்த "பாபி பிஷேர்", மாதிரியெல்லாம் யோசிக்க முடியலே. ரொம்பவே குழம்பிப் போயிட்டேன். அதனாலே நம்ம எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் மிஸ்டர் பீன் (Mr .Bean )அவர்களை கூப்பிட்டு   இருக்கேன்.என்ன பண்ணுறார்?. நீங்களே பாருங்க! .

  

சுத்தம் என்றால் என்னங்க?. குப்பைகளும் கழிவுகளும் இன்றி இருப்பது தானுங்க .சுத்தமா இருந்தா வியாதி குறைவாய், சுகமா இருக்கலாங்க. எப்படியோ குப்பையை பத்தி எழுதப் போற தலைப்பை சுத்தி வளைச்சு இதிலே கோர்த்து விட்டேனுங்க .

ஆக்கல்,அனுபவித்தல் ,அழித்தல் என்று குப்பை கழிவுகளின் மூலாதாரத்தை பற்றி பேசலாமுங்க .மரம் ,செடி ,கொடி, தாவரம்  என, இயற்கையில் இருந்து, எல்லா வாழும் உயிரினங்களும் தத்தம் கழிவுகளை வெளியேற்றுகின்றன.  கழிவு எனபது ஒரு சுழற்சி, இயற்கையே இந்த விஷயத்தை யார் தலையீடும் இல்லாமே, தானே சரி  பண்ணிக்கிட்டு தான் இருந்தது.அப்புறமா !.

மனிதனின் அதிகரித்த தேவைகள், நாகரிகம், உணவுப் பழக்க வழக்கம் ,மக்கள் பெருக்கம், என எல்லாம், செயற்கையாய் நிறைய பொருட்கள்  தோன்ற காரணமாகி விட்டது.எளிதில்  மக்கக் கூடியதும், மக்காததும், நச்சுத் தன்மை கூடியதும், எளிதில் அழியாததும் என பல வகையில். " இதை எப்படி, இந்த நகரத்தில் ( Monash Municipality) கையாளுகிறார்கள்?.", என்பதைப் பற்றிய என்னுடைய பயண அனுபவம் .மேலே உள்ளது ஒவ்வொரு இல்லத்தில் இருந்தும் சேகரிக்கப் படும் குப்பைகளை போட்டு வைக்க வேண்டிய பிளாஸ்டிக் தொட்டிகள் .

சிகப்புத் தொட்டியில் வீட்டு  சமையலறைக் கழிவுகள்.வாரம்  ஒருமுறை அகற்றப் படும் .

மஞ்சள் தொட்டியில் அலுமினியம் ,ஸ்டீல் குப்பிகள், அலுமினிய தட்டுகளும் சுருள்களும் (Aluminium Foil trays )
காலியான கண்ணாடி சீசாக்கள் ,குடுவைகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்கள் .
செய்தித் தாள்கள், வாரந்திர, மாதந்திர ஏடுகள், டெலிபோன் டிரெக்டரி, பள்ளிகூட காகிதங்கள், நோட்டுக்கள் .
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அகற்றப் படும் .

பச்சை நிறத் தொட்டியில் வெட்டப்பட்ட புல்லின் துணுக்குகள் வேரில் மண் இன்றி களைச் செடிகள் ,இலைகள் மற்றும் பூக்கள் .
கத்தரித்து விழுகின்ற ரோசாச் செடி மற்றும் கொடிகளின் கழிவுகள் ,மற்றும் தாவரங்களில் இருந்து உதிர்கின்ற தும்புகள் 40 செ.மீ நீளம் ,10 செ.மீ குறுக்கு விட்டமும் ,அதற்கும் குறைவான மரக் குச்சிகள், கிளைகள் .
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அகற்றுவர் .
இவர்களின் தாரக மந்திரம் ..குப்பை கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு ,குறைக்கும் வழிகள் ,மறு உபயோகம் மற்றும் மறு சுழற்சி ( Rethink ,Reduce ,Reuse ,Recycle )

தேவைப் படாத ஆடைகள் ,காலணிகள் ,விளையாட்டு சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக சாமான்களை நன்கொடையாய் கொடுக்க அறிவுறுத்துகிறார்கள் .

பெயிண்ட் ,அமிலங்கள் ,வாகன எண்ணைகள் ,கட்டிட கட்டுமான   பொருட்கள் ,காங்க்ரீட் ,எல்லா வகை பாட்டரிகள், செல் போன்கள், குழல் விளக்குகள் எல்லாம் இதற்கென்றே பிரத்தியேகமாய் உள்ள சேகரிப்பு மையத்தில் தரப் பட வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் கழிவுகளுக்கு கட்டணம் வசூலிப்பர் .

மின்னணுப்   பொருள் கழிவுகள்   ( e-Waste

கணினிகளில்   இருந்து விலையுயர்ந்த  கனிமப் பொருட்களை பிரித்து, மறு உபயோகம் செய்ய இயலும் .தாமிரம் ,குரோமியம் ,ஈயம் பாதரசம் மற்றும் வெள்ளி போன்றவற்றை .மேலும் சுற்றுச் சூழலுக்கு  ஊறு விளைவிக்க கூடிய பொருள்களும் கணினிகளில் இருக்கும். இந்த மாதிரிக் கழிவுகளை ,சிறிதே கட்டணம் கட்டி, இங்கே சேர்ப்பித்தல் வேண்டும் .

" இந்த வருடம் ஜூன் 23 ம்ம் தேதி வீட்டுக்கு வீடு வந்து சமையலறை மற்றும் கழிவறையில் சுத்தம் செய்ய உபயோகிக்கும் அமில பொருட்கள் ,எரி பொருள்,வாகன எண்ணைகள் ,கரைப்பான்கள் ,நீச்சல் குளங்களை பராமரிக்கப் பயன்படும் இரசாயனங்கள் ,உரங்கள் ,வாய்வு உபயோக சாமான்களை, பாதுகாப்பாய் ,இயற்க்கைக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் மறு சுழற்சி செய்ய ,எடுத்துச் செல்வோம் " ,என கடிதம் அனுப்பி உள்ளனர் .

" எக் காரணம் கொண்டும் இவை குப்பைத் தொட்டிகளில்   போடப் படுதல் கூடாது ", என்கிறது விதி .

ரொம்பவே அக்கறை எடுத்துகிறாங்க.வீடுகளிலேயே, இந்தக் குப்பைகளும் கழிவுகளும், ரக வாரியாய் பிரிக்கப் பட்டு ,பின் அகற்றப் படுவதில் எல்லோருடைய பங்கும் மகத்தானது .இது சிறியவர் ,பெரியவர்களிடம் ஏற்படுத்துகின்ற விழிப்புணர்ச்சி கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம்ன்னு, எனக்கு தோணிச்சுங்க.வணக்கங்க .

அனைவருக்கும் நன்றிங்க...    
         
  
நன்றி : கூகுள் படங்கள் ,யு ட்யூப்.    

8 கருத்துகள்:

 1. முதலில் உங்கள் நூறாவது பதிவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். எனக்கு தோன்றுவது பொதுவாகவே சுத்தம் சுகாதாரம் போன்றவற்றில் நம்மவர் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. செலுத்தமுடியாமலும் இருக்கலாம். கழிவு உற்பத்தி ம்க மிக அதிகம். ஜனத் தொகையும் ஒரு காரணமோ. ? தண்ணீர் தட்டுப்பாடு. கழிவுகளைப் பிரித்து மக்கச் செய்யவோ, ரீசைக்கிள் செய்யவோ போதிய ஏற்பாடுகள் நகரங்களிலேயே செய்யப் படவில்லை. கிராமங்களில் கேட்கவே வெண்டாம்.மலஜலம் கழிப்பதே வெட்ட வெளியில்.நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம் காளிதாஸ் சார்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா, 100 ஐத்தொட்டதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும். இந்தப் பதிவைப் படித்து பெருமூச்சுதான் வருகிறது, இந்த ஊரில் இது சாத்தியப்படுமா?

  பதிலளிநீக்கு
 3. திரு G.M.B அய்யா அவர்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.நம்முடைய பிரச்சினைகள் மலை போன்றவை என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.ஆயின் தீர்க்கப் பட வேண்டியவை.வழி நிச்சயம் இருக்குங்க.நமக்கு ஏற்றவாறு எளிய முறைகளிலே படிப் படிய செய்யலாங்க.அது பற்றிய விழிப்புணர்ச்சி சமூக அக்கறை,தொலை நோக்கோடுடன் கூடிய திட்டம்..நிச்சயம் முடியுங்க.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆரம்பிச்சா விடிவு காணமுடியும். ஊருக்கு தான் உபதேசம் என்றில்லாமல். அன்புடன்

  பதிலளிநீக்கு
 4. திரு umesh Srinivasan அவர்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.வழி நிச்சயம் இருக்குங்க.நமக்கு ஏற்றவாறு எளிய முறைகளிலே செய்யலாங்க. அடிமேல் அடி எடுத்து வைத்தால் எல்லாமே சாத்தியம் தானுங்க.முடியும்ன்னு நம்புகிற மனதிற்கு திறக்காத கதவுகளே கிடையாது.மனோ நிலையை மாற்றிக் கொள்ளுவதுதான் முதல் படி.அன்புடன்

  பதிலளிநீக்கு
 5. கழிவுகளை அகற்றுவது எப்படி என்று திட்டமிடுவதினும், அவற்றை உண்டாக்காமல் இருப்பது எப்படி என்று திட்டமிடலாம். கடைக்குப் போகும்போதெல்லாம், சாக்குப் பையுடன் செல்லலாம். அலுமினியக் கேன் கொண்டு செல்லலாம் எண்ணெய் வாங்க. பொருட்களை மதிப்பதற்கு நியூஸ் பேப்பரை உபயோகிக்கலாம் பிளாஸ்டிக் பைக்குப்பதிலாக. பிளாஸ்டிக் பையை வெறுப்பதையே குறிக்கோளாகக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 6. திரு .கோவிந்தராஜன் அய்யா.. அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .தங்கள் கூற்று முற்றிலும் சரியே பெரும்பாலும் துணிப் பையுடன் தான் செல்கிறேன் .மற்றபடியும், முடிந்த அளவில், பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதை தவிர்க்கிறேன். ஊருக்கு உபதேசம் என்றில்லாமல் நமக்கு நாமே முயற்சிகளை மேற் கொள்ளலாம் .அய்யாவுக்கு என் அன்பும் வணக்கமும் .

  பதிலளிநீக்கு