இதம் தரும் இருப்பிடம் ..இல்லத்தில் நல்ல இல்லம்.
COOLING SYSTEM |
குத்துக் காலிட்டு ,
கூரை மேலே குந்தி,
நீர் மெள்ள உறிஞ்சி ,
நெருப்பான காற்றின்,
நெஞ்சம் குளிர வீசும்.
நிரம்பவே சூடு தணித்து
மச்சு மேலே படுத்து,
மயக்க நிலையில் கிடக்கும்,
நாகமாய் நீண்ட குழலில்,
நளினமாய்த், தானே தவழ்ந்து
கொப்பளிக்கும் அறைக்குள்
குளிர்ந்த காற்றாய்த் தானே !.
HEATING SYSTEM |
பருவ நிலை மாற ,
பல்லைக் கிட்டும், குளிர்.
கும்மட்டி அடுப்பு மூட்டி,
குளிர் காற்றில், கனல் ஏற்றி,
நிலவறையில் நீண்டு,
நெளிகின்ற குழாய்க் குழுமம்
ஊரிவரும் காற்று,உடன்
சீறி வரும்,அறைக்குள்.
சிதற வைக்கும் குளிரை .
சிவக்க வைக்கும் அறையை .
கத கதக்க வைக்கும்
கம்பளிகள் தேவையின்றி .
கத கதக்க வைக்கும்
கம்பளிகள் தேவையின்றி .
( FRESH AIR )
உசுப்பேத்தும் அனல் காற்றை,
உறவாடி, உள் கலந்து
உறவாடி, உள் கலந்து
ஊடலாய் கொஞ்சும்,
கொஞ்சம் குளிர்காற்று.
நெஞ்சம் குளிரவைக்கும்,
மஞ்சம் மகிழ வைக்கும்.
மகிழ்வில் மனம் சிரிக்கும் .
மகிழ்வில் மனம் சிரிக்கும் .
நன்றி :கூகுள் படங்கள்
இருப்பதை எண்ணி இல்லாதது மறக்குமா. இல்லாதது எண்ணி இருப்பது மறக்குமா. எப்படி இருந்தாலும் இருக்கும் இடமே இதம் தர வேண்டும். அதுவும் நம் இடத்தில் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமை...அழகு.... வாழ்த்துக்கள்!
நீக்குதிரு.G.M.B அய்யாவுக்கு.நன்றிங்க..
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க.சகோதரி சித்ரா.
பதிலளிநீக்குகுளிர் போக்கப் பயன்படுத்திய அந்தக்கால குமுட்டி அடுப்பை நினைவூட்டிய அருமையான பாடல் வரிகள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குதிரு.கோபாலகிருஷ்ணன் சார்.
எல்லாம் சரிதாங்க ஆனா எங்களைப்போல கைக்கும் வாய்க்கும் சரியா போனா எங்கங்க மனை அமைக்க கனவில் கூட கடமை அழைக்கிறதே(ஒருவர் மட்டுமே பொருளீட்டுவதால்)மகள் திருமணம்,மகனுக்கு வேலை (தேடும்) அமைந்திட என பலப்பல காரணங்களினால்....
பதிலளிநீக்குமுதலில் வருகைக்கு மிக்க நன்றிங்க.உங்களை மாதிரித்தான் நானும் .இது பயண அனுபவத்தில் தங்கியிருக்கும் இல்லத்தை பற்றி எழுதியது.குளிர்விக்க நீரையும் ,சூட்டிற்கு இயற்கை எரி வாய்வையும் இங்கு ஆஸ்திரேலியா வீடுகளில் பயன்படுத்துகின்றனர்வ ளி மண்டலத்தில் மாசு கூடுதலை தவிர்க்கவும் "ஓசோன் ஓட்டை",இன்னும் பெரிதாகாமல் இருக்க .இந்த கருத்தை பகிரவே இந்தக் கவிதை .உங்கள் ஆதங்கம் உணர்கின்றேன்.உயரலாங்க உழைப்பால்.வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு