வெள்ளி, 11 மே, 2012

மின்சாரம் கண்ணா! ...1

மின் தீர்வையும் .. சில தீர்வுகளும் ..
அலைக்கழிக்கும் மின்வெட்டு, அதிகமான தீர்வை ( மின் கட்டணம் ).ஆட்டிப் படைக்கிறது அடிக்கும் வெயிலும், அடி வயிற்றை கலக்கும் கட்டண உயர்வுகளும்.
மின்வெட்டு தீரலாம். அரசாங்கஅஸ்திவாரம் ஆடாமல் இருக்க இது அவசியம். ஆட்சியாளர்களின் அதிக கவனம் தற்பொழுது,மின்வெட்டை எப்படி தவிர்ப்பது என்பதில் தான்.
ஓரளவு நாமே சமாளிக்கலாம். ஜெனேரட்ட்டர், இன்வர்டர்,சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் சாதனம்,ஆகியவற்றின் மூலம், வசதி இருந்தால்.
ஏற்றப்பட்ட மின் கட்டணம் குறைய வாய்ப்பே இல்லை. கொஞ்சம், தொலை நோக்கோடு, யுக்தி சிலதை கடைப்  பிடித்தால் முக்தி அடையலாம்.

Incandescent Light Bulb 
தாமஸ் ஆல்வா எடிசன் December 1879 
மின்விளக்கு கண்டு பிடித்த பெருமகன்  

















ஒவ்வொரு யுகத்திலும் உலகை ரட்சிக்க, காக்கும் கடவுளான  திருமால், அவதாரம் எடுத்ததாய் புராணங்கள் புகழ்கின்றன. அது மாதிரி, இந்த இக்கட்டை சமாளிக்க நாம் செல்லமாய் அழைக்கின்ற குண்டு பல்புக்கு(Incandescent Light Bulb) விடைகொடுத்து விட்டு, புது அவதாரமான CFL (Compact Fluorescent Light ) என்ற சிறிய குழல் விளக்கை பயன்படுத்த தயாராக வேண்டும். குண்டு பல்பின் அந்திம காலம் நெருங்கி விட்டது. இன்றைய நிலையில்,அழியப் போகின்ற உயிரினங்கள் மாதிரியான நிலைக்கு போய்க் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில், குண்டு பல்பு தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்திட்டாங்க. காலத்தின் கட்டாயத்தில், புதிய பரிணாம வளர்ச்சி CFL எனப் படும், சிறுகுழல் விளக்குகள்.ஆண்டு ஆண்டாய் உழைத்த குண்டு பல்பு, இப்போது சீண்டுவாரின்றி மூன்றாம் தாரமாகும் நிலை. இதுக்கெல்லாம் காரணம்.
  • மின்சாரம் இந்த பல்பின் இழை நார்களில் ஓடி வெப்பமாய் ஒளிர்கிறது.
  • நிறைய மின்சாரம் சாப்பிட்டு கொஞ்சம் வெளிச்சம் தந்தது .மீதி மின்சாரம் வெப்பமாகிப்  போனது.
  • இதன் ஆயுள் காலம் 1200 மணிகள் நேரம் தான்.
ரொம்ப நாளைக்கு ஜனங்க, இதைப் பத்தி அலட்டிக்கவில்லை. திடீர் என்று 1970
-ம் ஆண்டு வாக்கில் அரபுக் காரர்கள் எல்லாம் விழித்துக் கொண்டு, எண்ணை விலையை ஏற்ற, பெட்ரோல், டீசலில் இயங்கிய மின் உற்பத்தி நிலையங்கள் தள்ளாடி தவித்தன. விழித்துக் கொண்ட உலகம், எரி பொருள் சிக்கனம், மேம் பட்ட விளக்குகள், காற்றாலை, சூரிய சக்தி என்ற மாற்று சக்திகளை யோசிக்க ஆரம்பிச்சது.இதன் விளைவாய்,இதற்கு அப்புறம் ட்யூப் லைட் எனப் படும் நீண்ட குழல்(Fluorescent Light) விளக்குகள், முன் எப்போதும் இருந்ததை விட, மிக அதிகமாய் புழக்கத்திற்கு வந்தன.
குண்டு பல்பின் அழிவுக்கு,அப்போதே அடிக்கல் நாட்டி விட்டனர்.இந்தக் குண்டு பல்பின் வெப்ப ஒளிர்வு, பயன் படுத்துகின்ற இடத்தை சூடு பண்ணி விடுகிறது. இந்த சூட்டை சரிகட்ட ஏ.சி. எல்லாம் இன்னம் தம் புடிச்சு ஓடணும். அப்புறம் கோடிக்கணக்கில் புழக்கத்தில் உள்ள இந்த பல்புகளாலே ஏற்படு கின்ற வெப்பம், அதனால் உற்பத்தியாகும் கரியமில வாய்வு, அந்த வாய் வினால் ஏற்படும் மாசு. அப்புறம் அதிக மின்சாரத்தை விழுங்கி அதற்கு ஏற்ற ஒளி தரும் திறன் இல்லாதது . கம்மியான ஆயுள் காலம். அப்ப்படின்னு, இப்போ ஆகாத மாமியார், கதை ஆகி விட்டது. என்ன பண்ணலாம் ?.


குழல் விளக்கு 
இதற்கு மாற்றாய் வந்த குழல் விளக்கு ,இரண்டு அடி.,நாலு அடி, என. பாம்பு மாதிரி நீளமான உருவத்தில்
எப்படி தயாரிச்சாங்க?... கேக்குறிங்களா ?. நீண்ட கண்ணாடிக் குழலின் உள்புறம் மின்சாரம் ஓடினால் ஒளிரும் ரசாயனம் ( Phosphor ) பூசிட்டாங்க. அந்த குழாய்க்குள் பாதரச ( Mercury ) வாய்வை அடைச்சுட்டாங்க. அந்தக் குழல் விளக்கை எரிய வைக்க சோக்கும் (Choke ), ஸ்டார்ட்டரும்( Starter ) துணைக்கு வைச்சிட்டாங்க.
இடத்தை அடைக்குது,விலை ஜாஸ்தி. ஆனாலும் குறைந்த மின்சாரம், நிறைய வெளிச்சம் .சுமார் ஐந்து, ஆறு மடங்கு கூடிய ஆயுள் காலம், குண்டு பல்பை காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு மின் தேவை மாத்திரம். குறை என்னன்னா ,சுவிட்சு போட்டதும், கொஞ்சம் முனங்கி விட்டு, யோசித்து தான் எரியும். ரொம்ப கண் சிமிட்டி( Flickering )  எரிச்சலைக் கொடுக்கும்.
ஆனாலும் பரவாயில்லே! . கரண்ட் பில்லு கம்மியாயிடிச்சு. அப்பாடா!. அதானங்க, முக்கியம்.  பயன்பாடு சூப்பர்..  ஆனால் பணம் ஜாஸ்தி, இதை பொருத்த. இந்த சுணக்கத்தினால்  குண்டு பல்பின் ஆதிக்கம் முற்றுமாக குறையவில்லை. 
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவை, அதை ஈடு கட்ட இயலாத பற்றாக் குறை, முன்னேறிய தொழில் நுட்பம் , எல்லாம் சேர்ந்து சிறுகுழல் மின் விளக்கு (CFL ) உருவானது.

சிறுகுழல் மின்விளக்கு (CFL )
குழல் விளக்கின் சோக்கும் (Choke ), ஸ்டார்ட்டரும்( Starter ), மின்னணு நுட்பத்தின் தயவில் குட்டியாய் உருவெடுக்க, மேம்பட்ட ஒளிரும் தன்மை யுடைய பொருட்கள் ( Phosphor ) உள் முலாம் பூசப் பட்டு ,மொத்தத்தில்   சிறு குழல் விளக்காய், வாமன அவதாரம் .
அதிக ஆயுள் ,சிறிய உருவம். சிமிட்டல் இல்லாமல் சிந்தும் மேம்பட்ட ஒளி,மின்சார  சிக்கனம்,  இவற்றின் சிறப்பு அம்சங்கள் .  காசுக்குக் தகுந்த தோசை.
கொஞ்சம் நமக்கு  எட்டுற விலைக்கு இது கிடைக்க சீனா தான் காரணம். அமெரிக்காவில்  தயாரிக்க ஆசைப் பட்டாலும் கூலி கொடுத்து மாளவில்லை. சீனாவை உசுப்பிட்ட்டாங்க. வழக்கம் போல.
இது எல்லாத்துக்கும் அண்ணன் ஒருத்தரு சூப்பர் மேன் மாதிரி இப்போ வந்து கிட்டு இருக்காரு. எல் .ஈ.டி. ( Light Emitting Diode )  என்ற மின்னணு பொருளில் தயாராகிறது. மூர்த்தி சிறிது .கீர்த்தி பெரிது. கடுகத்தனை மின்சாரத்தில் மலையளவு ஓளி, சுமார் 50 ஆயிரம் மணி நேரம் உழைக்கக் கூடியது.

எல் .ஈ ,டி (Light Emitting Diode )  
அதுக்கேத்த விலை .இப்போ டிராபிக் சிக்னல் விளக்குகளில் பயன் படுத்தப் படுகிறது .வீட்டிற்க்குள் வரும் நாள் இன்னும் அதிக தொலைவில் இல்லை.
  மின் விளக்கின் வகை LEDசிறுகுழல் மின்விளக்கு  CFLகுண்டு பல்பு


ஆயுள் காலம் (மணிகளில் )

50,000 
10,000 
1,200 


 60 வாட் குண்டு பல்புக்கு இணையான வெளிச்சம் 

10w
14w
60w


தோராயமான  சந்தை விலை
ரூ 1500
ரூ 100
ரூ 10

ரொம்பவும் பாராட்டுக்குரிய விஷயம், நம்ம அரசாங்கமும் ஒரு கோடி சிறுகுழல் விளக்குகளை தற்போதைய சந்தை விலை ரூ 100௦௦ க்கு பதிலாய் மானிய விலையில் ரூ15 க்கு தரும் திட்டம்.செயல் படுத்தப் போறாங்க . இத் திட்டத்தால்.சுமார் 250 மெகா வாட் மின் தேவை குறையும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இன்னும் பல நாடுகள், குண்டு பல்பை குழிதோண்டி புதைக்க  சட்டம் கொண்டு வந்து விட்டனர். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலான சகாப்தம் ...பாவம். காலத்தின் கோலம் . 
முக்கியமா ஒன்று ..சொல்ல மறந்துட்டேனுங்க. குழல், சிறுகுழல் விளககில் எலலாம், பாதரசத்தை பயன் படுத்துறாங்க .இந்த வாய்வு வெளிப் பட்டால் மனிதன் ,உயிரினம், சுற்றுச் சூழல் மாசுபடுதல், ஆகிய கெடுதல்கள் உள்ளன. சீனாவில் இந்த குழல் விளக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை விபத்தில், பாதரசக் கசிவால், நூறுக்கு மேல்பட்டோர் இறந்து போனதாக தகவல்.  கவனமாக கையாணுமுங்க. அன்பு கூர்ந்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தீர்வுகள் தொடரும் ..
நன்றி :கூகுள் படங்கள் ,விக்கி பீடியா,ஜெனெரல் எலெக்ட்ரிக் ..மற்றும்                      

2 கருத்துகள்: