முதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி .
பார்த்ததும் பரவசம் .மனம் குளிர்கிறது .நேர்த்தியாய் அமைக்கப் பட்ட வீடுகள் . " குன்றின் மேல் நின்றாடும் முருகன் ",அரை கல் தொலை வில் அருள் பாலிக்கிறார் .நீல மலைகள் சூழ, நெடிது பரவிய புல் வெளியில், புத்தம் புதுத் தோற்றத்துடன் .
அமைதியாக ,ஆரவாரமின்றி ,மிதமான தட்ப வெட்ப சூழலுடன் , ஊரிலிருந்து சற்றே ஒதுங்கி மோனத் தவம் இருக்கிறது ,இந்தக் குடில்கள் .
ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை எல்லா விதத்திலும் தொட்ட நானும் ஒட்டியவராய், என் துணைவியும் .வரும் மே 17ம் தேதி, நாற்பது ஆண்டை நிறைவு செய்த மண வாழ்க்கை.
மே 15 ஆம் தேதி இரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 0630 மணிக்கு தொழில் நகரம் கோயம்புத்தூரை வந்து அடைந்தோம் .சூப்பராய் ஒரு டீ குடித்துவிட்டு 'காரமடை' வழியாய் செல்லும் பேருந்தில் ஏறி, ஒரு மணி நேரத்தில் உருளைக்கிழங்குக்கு பெயர் பெற்ற மேட்டுப்பாளையம் வந்து இறங்கினோம் .தகவல் கொடுத்த சில மணித்துளிகளில் ,மேலூர் புல்வெளிகளின் சிகப்புக் கார் எங்களை கடத்திச் சென்றது .இது ஒரு ஓய்வுற்றோர்க்கான இல்லங்கள் அமைக்கப் பெற்ற இடம் .குமரன் குன்று எனப்படும் கிராமத்தில் ,மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது. ஊரில் இருந்து ஒதுங்கி ,சற்றே உள்ளடங்கி ,ஆரவாரமின்றி அமைதி காத்திடும் ,இடமாக .
நாற்பது வருடம் கழித்த நன்னாளை ,இங்கே கழிக்கும் உத்தேசம் .
பார்த்ததும் பரவசம் .மனம் குளிர்கிறது .நேர்த்தியாய் அமைக்கப் பட்ட வீடுகள் . " குன்றின் மேல் நின்றாடும் முருகன் ",அரை கல் தொலை வில் அருள் பாலிக்கிறார் .நீல மலைகள் சூழ, நெடிது பரவிய புல் வெளியில், புத்தம் புதுத் தோற்றத்துடன் .
நேரத்தோடு போட்டியிட்டு நேயம் தொலைத்தோரும் ,அந்திம காலங்களில் அந்நியமாகிப் போனோரும் ,கடல் கடந்து ஓடிக் களைத்து தம் புண்ணிய பூமியில் புகலிடம் தேடியவரும் ,துணை நீங்கி துயில் மறந்த சிலரும் ,புலம் பெயர்ந்த குழந்தைகளின் நலம் விரும்பும் பெற்றோரும் ,.என எல்லோர்க்கும் உடல், மனம், நலம் பேண உறுதுணையாய் உள்ளது, இந்த இடம் ,சாதி ,இனம் ,மதம் என பேதமில்லாத சங்கமம் .
அமைதியாக ,ஆரவாரமின்றி ,மிதமான தட்ப வெட்ப சூழலுடன் , ஊரிலிருந்து சற்றே ஒதுங்கி மோனத் தவம் இருக்கிறது ,இந்தக் குடில்கள் .
வேளா வேளைக்கு ,மணியடிக்காமலே சோறு ,குறிப்பிட்ட நேரத்தில் .மாலையில் , மதி கிறங்க வைக்கும் மலைக் காற்று,தடை இன்றி நடை பழக சுற்றிலும் நடை தளம் .கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர தயாராய் இருக்கும் மருத்துவ வசதிகள் ,சுத்தமாய் பளிச்சிடும் உணவுக் கூடம், தடை யில்லா மின்சாரம் ,என அனைத்து வசதிகளும் .நூலகம் ,இயற்கை வைத்திய வசதிகள் ,வாகன வசதிகளும் நிறைவாய் உள்ளது .மேலும் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன .
நாலா புறமும் வேப்ப மரங்கள் ,நான் மறந்து போன ஆடா தொடை, நுணா ,நொச்சி ,புங்கன் என பல விருட்சங்கள் வேர் கொண்டுள்ளன. கள்ளி ,பிரண்டை ,கற்றாழை ,கரும் துளசி ,ஓம வள்ளி என மூலிகை தோட்டமும் ,வெண்டை,கத்தரி,அவரை .கீரை ,பசலை ,என காய்கறித் தோட்டமும் கிராமீய மணம் கமழச் செய்கிறது .
பார்த்ததும் பிடித்தது ..நேசக் கரங்களும் ,தோழமை கலந்த புன்முறுவல்களும் ..ஆயிரமாயிரம் அர்த்தம் அவைகளில் பொதிந்துள்ள தாய் உணர்கிறேன். வாழ்ந்த வலிகள் மறக்கவும், இல்லத்தில் இழந்த தோழமையை மீட்டு எடுக்கவும் ,முதுமையை மூச்சு இருக்கும்வரை இலகுவாக்கவும் கண்டிப்பாய் இந்த இல்லங்கள் உதவும் .
Dear Sir,
பதிலளிநீக்குFirst of all wishing you a belated happy wedding anniversary. Happy to be in touch with you through this blog.
நாலா புறமும் வேப்ப மரங்கள் ,நான் மறந்து போன ஆடா தொடை, நொச்சி ,புங்கன் என பல விருட்சங்கள் வேர் கொண்டுள்ளன. மூலிகை தோட்டமும் ,காய்கறித் தோட்டமும் கிராமீய மணம் கமழச் செய்கிறது .
பதிலளிநீக்குaஅருமையான மனம் மகிழும் மண்ம் கமழும் இடம்..
என்ன ஒற்றுமை பார்த்தீர்களா.? நீங்கள் உங்கள் பதிவில் ஒரு முதியோர் இல்லம் பற்றி எழுதுகிறீர்கள். நானும் என்பதிவில் ஒரு முதியோர் இல்லம் பற்றி எழுதி இருக்கிறேன்.ஒற்றுமை இத்துடன் முடிகிறது. விடுதியில் இருக்கும் முதியோர் எல்லா விதத்திலும் வேறு பட்டவர்களாக இருப்பார்கள் வயது தவிர. நாற்பது ஆண்டு வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிரு G.M.B சார் அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் .நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.தங்களுடைய பகிர்வை படித்துவிட்டு என் எண்ணங்களைப் கூறுகிறேன்.
நீக்குThanks a lot..Mahesh and Madhuri..Feel delighted..Much more happy to come across with you ,two..Thanks again.
பதிலளிநீக்குசகோதரி ராஜராஜேஸ்வரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குExcellent writeup. Wish you and Madam all the very best. It was a pleasure interacting with you. Sathya
பதிலளிநீக்குMany thanks and welcome..Sathyaji..
நீக்கு