மும்பை 'நெருல்' இல் இருந்து டிசம்பர் 20-ம் தேதி புறப்பட்டோம்."தாதர்", போகும் வழியில் "குர்லா", ரயில் நிலையத்தில் இறங்கிய ஜனத் திரளில், என் மூக்குக் கண்ணாடி எகிறி பறந்து போனது. பிளாட்பாரத்தில் விழுந்த கண்ணாடி மிதிபட்டு நூறாகிப் போனது.கண்ணிருந்தும் கண்ணாடியில்லாமல் அரைக் குருடன் ஆனேன். மேலும் மாற்றுக் கண்ணாடி பத்திரமாய் சென்னையிலே இருப்பது பொறி தட்ட, கண்ணில் கம்பளிப் பூச்சிகள் அப்போதே ஊர ஆரம்பித்தது.
இரவு 10 மணிக்கு ரயில் ஏறி ஷிர்டியை மறுநாள் அதிகாலை 0430மணிக்கு சென்றடைந்தோம். ஸ்ரீ சாய் பகவானுக்கான முதல் ஆரத்தி நேரம் அது."மிஸ்",பண்ணி விட்டோம்.நேராக ஹோட்டல் சென்று குளித்து விட்டு 0630 க்கு வரிசையில் நின்று 0730 மணிக்கு பகவான் தரிசனம் முடித்தோம்.
அங்கிருந்து நாசிக் வழியாக "திரும்பகேஷ்வர்",சிவாலயம் சென்றோம். இது ஜ்யோதிர்லிங்க ஸ்தலத்தில் ஒன்றாகும். பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என மும்முகம்கொண்டவராய் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் பிரம்மகிரி மலையடி வாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.பக்தர்கள் கூட்டம்அலை மோதியது. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம், வரிசையில் நின்று சிவ தரிசனம் செய்தோம்.
பின்னர் நாசிக் திரும்பிய போது,சாயம் காலம் நான்கு மணியாகி விட்டது. அங்கு ஸ்ரீராமன் சீதை, லக்ஷ்மணன் கூட சில காலம் வசித்ததாகவும், இராவணன், சீதா பிராட்டியை இங்கிருந்து தான், இலங்கைக்கு கடத்தியதாகவும், புராணம்.
நன்றி: கூகுள் படங்கள்.

மீண்டும் மற்றவை அடுத்த பகிர்வில்..
நன்றி: கூகுள் படங்கள்.