புதன், 9 பிப்ரவரி, 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி.,,6.

நம் பந்தங்களும், பயன் பாடும் ( Networking ).
பல சமயங்களில் நம் அனைவரின் வாழ்க்கையிலும் நிறைய திருப்பங்கள், நம்முடன் தொடர்புள்ள நபர்களால் ஏற்படுகிறது. இந்த பந்தங்களைப் பரஸ்பரம் பலப்படுத்திக் கொண்டால், எடுத்த காரியங்களில் வெற்றி அடையவும்,நம் குறிக்கோள் களை எளிதே எட்டவும் இயலும்.

உதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு நபர்களைத் தெரிந்தெடுக்கும் போது பல வழிமுறைகளை பின்பற்று கிறார்கள்.எழுத்துத் தேர்வு,பின் நேர்காணல்,கலந்து உரையாடல் போன்ற, பல தகுதிகளும் ஆளுமைத்திறனும் சோதிக்கப் படுகின்றன.வேலைக்கான விளம்பரங்கள் செய்தித் தாள்கள், வானொலி, தொலைகாட்சி, வேலை வாய்ப்பு அலுவலகம், ஆன்லைன்( Internet ) மூலம் அறிவிக்கின்றனர்.
உலகில் இது மாதிரி அறிவிக்கப்படும் வேலையின் அளவு ஐம்பது விழுக்காடு என்றால்,மீதி ஐம்பது விழுக்காடு அளவு வேலைகள் தெரிந்தவர், தொடர்புகள், சிபாரிசுகள் மூலம் நிரப்பப் படுகின்றன என்றால் மிகையில்லை.மற்ற வழிகளைக் காட்டிலும் இவ்வாறு தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் சுமார் 42 மடங்கு அதிகம்என்பது வல்லுனர்களின் ஆய்வு. இதை எப்படி தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
நவீன உலகில்இணையதளம், தொலைதொடர்பு போன்ற சாதனங்களின் அபார பயன்பட்டால் நம்பந்தங்களின் உறவை பலப்பத்திக் கொள்ளுதல் சுலபம்.மின் அஞ்சல், குறுந் தகவல், இணையதளம்,முக நூல் ( Facebook, Twitter, Linked-In, Brijj )  என பலவழிகளில், நம் தொடர்புகளை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளலாம்.
"எங்கே போகிறோம் ?." , "என்னவாகப்போகிறோம்?." என்பதை சிந்தித்து தெளிந்தால் புலப் படாத வழிகளோ, தெரியாத பாதைகளோ கிடையாது. சரியான தொடர்புகள் நம்மை வழி காட்டி, சுலபமாய் குறிக்கோள் நோக்கி இட்டுச் செல்லும்.
பெரும் நிறுவனங்கள் தம்மிடம் பணிபுரிவோரை தக்க வைத்துக் கொள்ள, பணி விலகும் விகிதத்தை குறைக்க (Attrition Rate)  இணக்கமான அலுவலக சூழல், ஊக்கத் தொகை, உல்லாசப் பயணங்கள் என ஏற்பாடு செய்கின்றனர்.இது தவிர, தம் பணியாளர்கள் சிபாரிசு செய்பவர்க்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை (Referrals)  தருகின்றனர்.
நீங்க சொல்றது எல்லாம் சரிங்க...எப்படி நம் தொடர்புகளை உண்டாக்கிக் கொள்வது....

நீங்க..யோசிக்கறது புரியுது...

   சம்பந்தப் பட்ட வேலை பற்றிய விஷயங்களை, இது பற்றிய விஷய ஞானங்கள் உள்ளவர், எல்லோரிடமும் கேளுங்கள். இதில் தயக்கமோ,சோர்வோ அடையாதீர்கள். நல்ல நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அறிமுகம் இல்லை யெனினும், வலிய சென்று தொடர்புகளை சந்திக்கவும். பின் பரஸ்பரம் உறவுகளை பேணி பலப்படுத்திக் கொள்ளல் அவசியம். இதன் வாயிலாய் புதிய வேலை வாய்ப்புக்கள், வணிகத் தொடர்புகள்,உணர்வு பூர்வமான ஆதரவு (Emotional Support), உபயோகமான சிந்தனைகள் போன்ற பல ஆக்கப் பூர்வமான அதிசயங்களின் சாத்தியம் இருப்பது புலப் படும்.
                உதாரணத்திற்கு,  நீங்கள் ஒரு சிறு வணிகராயின் வாடிக்கையாளர், உற்பத்தியாளர், உங்களுடைய தொழில் முறை சக வணிகர்கள், உங்கள் கணக்கு வழக்குகளைப் பார்ப்போர், வங்கி அதிகாரிகள், நண்பர்கள், தொழில் விற்பன்னர்கள் ,என்ற தொடர்புகளை மேம்படுத்தி பரஸ்பரம் வெகுவாய் முன்னேற இயலும்.
" கோடு போட்டா ரோடு போடும் ", இந்தக் காலத்தில் கோடி காட்டினாலே போதும், என நினைக்கிறன்.

 சரி இதையெல்லாம்," ஏன் அய்யா நீ சொல்றேன்னு கேட்கலாம்"....

       என் சொந்த வாழ்க்கையில் பலமுறை, நான் சந்தித்த தொடர்புகள், உறவுகள், சொந்த பந்தங்கள் மூலம் சாதித்த காரியங்களும், முன்னேற்றமும் என்னை இதை எழுதத் தூண்டுகிறது.என் குழந்தைகளும் பல வகையில் சிறப்படையவும், நாங்களும் பலருக்கு உதவவும், ஏதுவாக அமைந்தது.
இந்த தொடர்புகள் ( Networking ) யாவும் பரஸ்பரம் அன்பு, நம்பிக்கை, அக்கறை, மரியாதை என்ற அஸ்திவாரத்தில் அமைய வேண்டும் என்பது மிக மிக முக்கியங்க..இந்த உறவுகள் எல்லாம் இருவழி பாதையாக அமைத்துக் கொள்ளுவது உத்தமம்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைங்க. உறவுக்கு கை கொடுக்கலாங்க..பழகிப் பாக்கலாம்.. வாங்க... பிடிக்கிறாமாதிரி பழகிக்கலாம் .பயன் பெறலாங்க.....
நன்றிங்க..
நன்றி : கூகுள் படங்கள்

14 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி. பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் இந்தப் பதிவு இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார். இதுபோல எதுவும் தெரியாமல், பிறரிடம் போய் கேட்க கூச்சப்பட்டு, மிகவும் Reserved type ஆசாமியாக இருந்து, பல வெற்றி வாய்ப்புகளை வாழ்க்கையில் இழந்தவன் நான். தங்களின் பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.திரு கோபாலகிருஷ்ணன் சார்.வருகைக்கு நன்றிங்க.வரும் தலைமுறைக்கு தயக்கங்களின் பாதிப்பை எடுத்துச் சொல்லலாங்க...

  பதிலளிநீக்கு
 4. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றிங்க 'ஆச்சி'( thirumathi bs sridhar)..என் ரோஜாவிற்கு நீரூற்றி உரமிட்டதாய் மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. திரு. சூர்யஜீவா..தொடர்ந்து எழுதுறேங்க.

  பதிலளிநீக்கு
 7. பிறருக்கு உதவத் துடிக்கும் உங்கள் பண்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.தற்காலத்தில்
  கொட்டிக் கிடக்கும் வாயப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது இளைஞர்களின் பொறுப்பு.
  ஊக்கம் அளிக்கும் உங்கள் அறிவுரைகளைத் தக்க முறையில் பின்பற்ற வேண்டும்.
  தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. உற்சாகம் தரும் தங்கள் கருத்துக்கு நன்றிங்க.வருகையில் மகிழ்கிறேன்.radhakrishnan சார் ..

  பதிலளிநீக்கு