சனி, 19 பிப்ரவரி, 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி . 7.

புன்னகை மந்திரம் .

" நாளொன்று போனால் பொழுது ஒன்று போகும்", என நித்தியச்சிக்கல்களும், கவலைகளும் உடலையும் மனதையும் சோர்வடையச் செய்கின்றன."மோப்பக் குழையும் அனிச்சம் போல் ",நம் மன உளைச்சல், குடும்பம், சுற்றம், என தொடர்ந்து,வாழ்வில் தேக்கத்தை தருகிறது .அன்றாட சிலவுகள், அச்சுறுத்தும் பில்கள்,கல்வி கட்டணம், மருத்துவ சிலவுகள் என மலைக்க வைக்கின்ற தேவைகள்.இதைப்பற்றிய நம் கவலைகள் இதன் தீர்ப்பு ஆகாது. மாற்றாக,இக் கவலைகள் நம் செயல்பாட்டை முடக்கி, முன்னேற்றங்களுக்கு பல சமயம்,முட்டுக் கட்டை ஆகி விடுகிறது.

என்ன செய்யலாம் ?.எப்படி நம் சூழலை மாற்றலாம்?.

முகுந்தனும், வசந்தனும் அவர்களின் வாழ்வில்  இந்த  பாதிப்புக்களை, தம் மதிப்பு மிக்க ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்களிடம் இயம்பினர். ஆசிரியர் ஒரு சிறு புன்னகையுடன் "உங்கள் வாழ்க்கைக் கோலத்தின் மையப் புள்ளியான நீங்கள், முதலில் உங்களையே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்",நீங்கள் கடந்து வந்த பாதைகளில் பெற்ற வெற்றிகள், இறையருளால் உங்களுக்கு கிடைத்து இருக்கின்ற உடல் ஆரோக்கியம், மனைவி, மக்கள் ஆகிய நல்லனவற்றில் மன நிறைவு பெறுங்கள்.மனதில் உற்சாகமும், சந்தோஷமும் பெறுவதை உணர்வீர்கள். ஒரு "டானிக்", குடித்த தெம்பு வரும்.

ஆரோக்கியமான சிந்தனைகள் உங்கள் மனம், உடல், உணர்வு, சக்தி எனும் கேந்திரங்களை ஒரு முகப்படுத்தி, மேலும் திறமை உள்ளவராய் உங்களை மிளிரச் செய்யும்.கவலை, கோபம், கண்ணீர், மன உளைச்சல் போன்ற எதிர் மறையான எண்ணங்கள் நம் உடலையும் மனதையும் குன்றச்செய்யும்.
நல்லது,கெட்டது என்பது பெரும்பாலும் நம் கண்ணோட்டத்தை பொறுத்தே உள்ளது. கெட்டதை சந்தித்தாலும், இதில் இருந்து மீண்டதை, வாழ்க்கையில் பாடம் கற்றதாய் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெறவேண்டும்.
அப்புறம் மனைவி,குழந்தை,சுற்றம், நட்பு, என எல்லோரையும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.தொன்று தொட்டு, ஒரு மந்திரம் இருக்கு.சிலவே கிடையாது. மனசு வச்சா உடனே செய்யலாம். புன்னகை எனும் பெரும்ந்திரம் தான், அது .என்றார் ஆசிரியர்.
பாராட்டுக்களை எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடாதிங்க. ஆறின கஞ்சி,பழம் கஞ்சிங்க. எந்த நல்ல செயலையும் அப்போதே, அந்தக் கணமே பாராட்டுங்கள்.அலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல், இணையதளம் என்று காலத்தையும் தூரத்தையும் குறைக்கிற சாதனமெல்லாம் இதற்கு நல்லா பயன் படுத்தலாமுங்க. இது பெரிய ஆக்க சக்திங்க.அம்புடுதேன். சொல்லிப்புட்டேன்.
"பாராட்டு ஒருவரின் மூளையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது", என்ற ஆராய்ச்சியில் உடலிலும் மனதிலும்,உன்னதமான செயல்பாடுகளை உருவாக்குவதை கண்டறிந்துள்ளார்கள்.
எதிர்மறை எண்ணங்கள்.                                                 பாராட்டுக்கள்

"வெற்றி பெற்றவர், புத்திசாலி", என்று நம்மை உலகம் நினைக்க வேண்டும் என கருதுவது, நம் அனைவரின்இயல்புங்க.நம்புங்க!

பாராட்டுக்களும்,புன்னகை மந்திரங்களும், இதை சாதிக்கும்.

சுருங்கச் சொன்னால் பாராட்டுக்கள் மகிழ்ச்சி,மன நிறைவு,வெற்றி என்ற பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது. விசாலமான மனம்,விரிசல் இல்லா வாழ்க்கை,விரிகின்ற உலகம் என்பது,இதன் அடுத்த படிங்க.என்ன இல்லை என்பதை விட,"என்னவெல்லாம் நாம் பெற்று இருக்கிறோம்" என்ற மன நிறைவு, வெற்றி என்னும் ஆற்றில் சீக்கிரம் கரை ஏற உதவும். மனதாரப் பாராட்டுங்கள்.மனம் விட்டுச் சிரிக்கப் பழகுங்கள். வாய் விட்டு சிரிச்சா,நோய் விட்டுப்போகும். "புன்னகைகளால ஆகாததொன்றும் இல்லைங்க".நேற்றைய விட இன்று,  இன்றை விட நாளை, என நல்லதாய் நம் உலகம் விரியும்...
சரி தானுங்களா!.
         
நன்றி : கூகுள் படங்கள்                             

8 கருத்துகள்:

 1. ஆசிரியர் சொன்னால் சரியாய்த்தானிருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. G.M.B அய்யா நீங்களும் ஒரு ஆசான் தானுங்க.

  பதிலளிநீக்கு
 3. இப்போது பிறந்த குழந்தைக்கும் பாராட்டு தேவைப்படுகிறது. தவிரவும் நாம் அடுத்தவரை மனதாரப் பாராட்டும்போது நாம் வளர்கிறோம். எப்போதும் நேரான எண்ணங்கள் வாழ்வை உயர்த்தும். நம்பிக்கைதான் வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
 4. திரு ஹரணி அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா ...

  சிந்திக்கும் எண்ணம்
  சந்திக்கும் வண்ணம்
  எதுவாகினும் எண்ணத்தின்
  நற்குணமே நலம்கூட்டும்
  நமக்கு என்றும் ......

  நினைப்பவை அனைத்தும் நல்லதே நினை செய்யும் காரியும் அனைத்தும் நல்லதே செய் வல்லமை உமக்குத்தான் என்ற உண்மையை அருமையாக கூறியுள்ளீர்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ..தினேஷ் ..நலம் தானே ....என்றும் அன்புடன்

  பதிலளிநீக்கு