புதன், 9 மே, 2012

ராக் கூத்து ...(Midnight Masala )

ராக் கூத்து ( Midnight  Masala )

நடுநிசி தாண்டிவிட்டது. சாமக் கோழி கூவிச்சான்னும் தெரியலை. உறக்க மின்றி உருள்கிறேன். மின்வெட்டில் தொற்றிய வியாதி. நித்திரா தேவி சொல்லாமா, கொள்ளாம அப்போ, விடுபபில் போனவுங்க தான்...என்ன பண்றது?. வழக்கம் போல, மடிக் கணினியை எடுத்து முக நூலை (Face Book) முப்பதாவது முறையாய், முறைக்கிறேன்.


பல்கலைக் கழக பையன்களின் தகவல் பரிமாற்றத்திற்காக, எலியட் சுகேர் பெர்க் ( Elliot Zuckerberg ) என்பவர்  கண்டுபுடிச்சது, முகநூல்.  பிச்சு கிட்டு போவுது,  இப்பொ.  நூறு பில்லியன் டாலர் மதிப்பை தொட்டுவிடும், அளவிற்க்கு.  இதில் அவருக்கு சொந்தமான பங்குகளே இருபத்தைந்து  பில்லியன் டாலரை தொடும், அப்படின்னு செய்திகள்.
அந்தத் தம்பிக்கு 27 வயசுதான். உலக ஜனத்தொகையில் எட்டில் ஒரு பங்கு ஜனங்க, அவர் தொடங்கிய முகநூல் பயன் படுத்துகிறார்களாம், தற் சமயம்.
பெரிய, பெரிய ஜாம்பவானா இருந்த மை ஸ்பெஸ் (My Space ), ஏ.ஒ.எல். , பிரெண்ஸ்ட்டர் ( Friendster ) எல்லாத்தையும், வல்லிசா ஓரம் கட்டிவிட்டு ஏழு, எட்டு வருடங்களுக்கு உள்ளாகவே அசுர வளர்ச்சி கண்ட கம்பெனி, முக நூல். மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு முழிக்குது, டுவிட்டர் ( Twitter), கூகுள் ( Google ) எல்லாம்.
இதிலே பணம் போடுகின்ற  முதலீட்டாளர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் ஒரு பெரிய  வருத்தம். என்ன தெரியுமா ?. இவரு டிரஸ் கூட  சரியா உடுத்தறது,  இல்லையாம்.  பின்னே, இவரு எப்படி, இவ்ளோ பெரிய கம்பெனியை,  நிர்வாகம் பண்ணப் போறார், அப்படின்னு. ஆனா அந்த தம்பி, சாதாரண ஆள் இல்லைங்க. அசால்டா, வாரக் கடைசியிலே காப்பி குடிக்கை யிலே, கூலா சும்மா ஒரு பில்லியன் டாலருக்கு இன்ஸ்டாக்ராம் (  Instagram )    என்ற கம்பெனியை வாங்கிப் போட்டு, பாக்கி பேருக்கு 'அல்வா' கொடுத்திட்டாரு . ரொம்ப கமுக்கமா. சரி.. சாரி. என் விஷயத்திற்கு வாரேன்.
இந்த முகநூலால், எனக்கு சில, பல சங்கடங்கள். " விட்டில் பூச்சி விளக்கை சுத்தி வர்றது "  மாதிரி, இந்த  மாய வலையில் நானும் விழுந்துட்டேன். இரட்டை இலக்க எண்ணுக்கு மேலே, எனககு  நண்பர் குழாம் ஒன்னும் சேரலே. உடனே கன்னி முயற்சியா, அதிலே 'தேடு', அப்படின்னு போட்ட டப்பாவில், என் நண்பர் பெயர் ஒன்றை,  ஒத்த விரலால் தட்டினேன். 
அவரு சிந்திக்காரர். என் கூட நாப்பது வருடத்திற்கு முன்பு,1972 ஆம் வருடம் மும்பையில், ஆகாச வாணியில், ஒன்றாய், பணி புரிந்தவர். அப்போ நாங்க ரொம்ப நெருங்கி பழகினோம். முக நூலில் கொஞ்சம் விவரமும்,  நிழல் மாதிரி புகைப் படமும் வந்தது. புரியலே.. மண்டையை பிச்சுகிட்டேன். 

 ஓவியர் ரவி வர்மா வரைந்த  ஓவியம்   
ஒரு தலை முடியைப் பார்த்து, சாமுத்திரிகா லட்சணம் யூகிச்சு, ஓவியம் வரைந்த ரவி வர்மா ஞாபகம் வந்தது. அப்புறம் உலகநாயகன் திரு.கமல ஹாசன், ஒரு திரைப் படத்தில், குழந்தை குஷ்பூ போட்டோவை வைத்து, குமரி குஷ்பூவை கண்டு பிடித்ததாய், மூளைக்குள் ஒரு பல்பு மின்னியது. காவல் துறையில் குற்றவாளிகளை பற்றி சேகரித்த  அங்க அடையாளங்கள் மூலம், கணினியில் கிராபிக்ஸ் முறையில் படம் வரைந்து, அப்புறம் லாடம் கட்டுறதும், புரை யோடியது . எல்லா லாஜிக்கும் யோசனை பண்ணி,அவர்...  நண்பேண்டா!... என்ற முடிவுக்கு வந்தேன். 
கணமும் தாமதிக்காமல், அவருடைய சுவரில், ஆதியோட அந்தமா, விலா வாரியா எழுதிப் போட்டேன். ம் ஹூம்..  பதில் ஒன்னையும், காணலை. சரி, ஆளு, இணைய தள இணைப்பு இல்லாத ஊருக்கு போயிட்டார் போல நினைச்சேன். தொல்லைத் தொடர்புக்கு அப்பாலே .. 
அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு "உன் கணக்கை முடிச்சிடுவோம் ",அப்படின்னு முக நூலில் இருந்து, ஒரு பயங்க மிரட்டல். அப்புராணி, நான் !.பயந்தே போயிட்டேன் .சர்வ நாடியும் ஒடுங்கிப் போச்சு. என்ன தப்பு பண்ணினோம். ஒரே குழப்பம். யோசிச்சு, யோசிச்சு, மைக்ரேன் அட்டாக் ஆயிடுச்சு.
என்னுடைய குடும்பத்தில் சிலரும், குழந்தையாய் பிறந்ததில் இருந்து பார்த்த நண்பர்களும் தான், என் முகநூல் சகா, சகிக்கள். விரல் விட்டு எண்ணும்  அளவுக்கு ...அப்புறம் தான் என் சிந்தி  நண்பர்,  முக நூலில் முதல் தகவல் அறிக்கை( F.I.R ) , ஏதோ பதிவு பண்ணியிருப்பார் போல... நான் அவர்  செவுத்திலே எழுதினது, புடிக்காமே. துப்பறியும் சாம்பு மாதிரி, திடீரென்று ஞானோதயம்.
சுவற்றில் எழுதியதால், ஒரு வேளை, தேர்தல் கமிஷனுக்கும் பெட்டிஷன் அனுப்புனாரான்னும் தெரியலே. சீச்சீ .. இந்தப் பழம் புளிக்கும்..அப்படின்னு.. முக நூலில் இருந்து வெளியேற்றப் படும் நாளைஎதிர் பார்த்து ஆவலாய், காத்துக்கிட்டிருந்தேன். இணையதள செலவாவது குறையுமில்ல. ஆனால நம்ம ஊரு, கோர்ட்டில் போட்ட கேஸ் மாதிரி...தீர்ப்பு இன்னும் வரலே.
"ஆளை விட்டா போதும சாமின்னு " , இப்போ முகநூலில் நண்பேண்டா!.. அப்படின்னு சொன்னாக் கூட, நம்பறதில்லை. இருந்தும் முக்கிமான இரண்டு காரணங்களினால் முக நூலில் முழிக்க வேண்டியிருக்கு, தினமும்.  
ஒனறு , முக்கியமா " தொடுவானம் " என்ற  தொட முடியாத தலைப்பில், கொஞ்சம் குப்பைக் கொட்டுகிறேன். யாரும் கண்டுகிடறது  இல்லை இருந்தும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கொள்கையோடு, முக நூலில் பகிர்கிறேன், மனம் தளராமல்.
 ரெண்டாவதாய் என் பேரனும், பேத்தியும் தினமும் ரெண்டு மூணு முறை முக நூலில் வேண்டுகோள் அனுப்புறாங்க. நான் ஓய்வா இருப்பது பிடிக்காம.  சிட்டிவில் ( Cityville ) அப்படிங்குற விளையாட்டு. விளையாட . அப்புறம் ஜிங்கா ( Zynga ) அப்படீனு ஒரு விளையாட்டு.
இடைச் செருகலாக சொல்லி வைக்கிறேன், உங்க காதுக்கு மட்டும் . இந்த விளையாட்டை கண்டுபுடிச்சவரு, விளையாட்டு போல,  கோடீஸ்வரர் ஆயிட்டாராம், இதன் மூலம்.


இதிலே ஒரு முக்கியமான விஷயம் இருக்குதுங்க. இந்த விளையாட் டெல்லாம், நீங்க எப்படி விளையாடுறிங்க?, எந்த வலை தளத்துக்கு எல்லாம் போறீங்க?, உங்க டேஸ்ட் என்ன ?..இத்தியாதி .இத்தியாதி...செய்திகளை எல்லாம் ஒரு மெகா கம்ப் யூட்டரில் கடைந்து , உங்களுக்கு நைசா  வலை வீசி பொருட்களை தலையில் கட்டி விட முடியுமாம். எல்லாம் விளம்பரமும், வியாபார யுத்திகளும் தான் .பார்த்துக்கோங்க.அப்புறம் உங்க இஷ்டம்.                            

ன்றி:கூகுள் டங்கள்.     

1 கருத்து:

  1. வருகைக்கு நன்றிங்க..பகிர்வை இணைக்க முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு