முதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி .
ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை எல்லா விதத்திலும் தொட்ட நானும் ஒட்டியவராய், என் துணைவியும் .வரும் மே 17ம் தேதி, நாற்பது ஆண்டை நிறைவு செய்த மண வாழ்க்கை.
மே 15 ஆம் தேதி இரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 0630 மணிக்கு தொழில் நகரம் கோயம்புத்தூரை வந்து அடைந்தோம் .சூப்பராய் ஒரு டீ குடித்துவிட்டு 'காரமடை' வழியாய் செல்லும் பேருந்தில் ஏறி, ஒரு மணி நேரத்தில் உருளைக்கிழங்குக்கு பெயர் பெற்ற மேட்டுப்பாளையம் வந்து இறங்கினோம் .தகவல் கொடுத்த சில மணித்துளிகளில் ,மேலூர் புல்வெளிகளின் சிகப்புக் கார் எங்களை கடத்திச் சென்றது .இது ஒரு ஓய்வுற்றோர்க்கான இல்லங்கள் அமைக்கப் பெற்ற இடம் .குமரன் குன்று எனப்படும் கிராமத்தில் ,மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது. ஊரில் இருந்து ஒதுங்கி ,சற்றே உள்ளடங்கி ,ஆரவாரமின்றி அமைதி காத்திடும் ,இடமாக .
நாற்பது வருடம் கழித்த நன்னாளை ,இங்கே கழிக்கும் உத்தேசம் .