செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி.5.


மகளிர் மேம்பாடு . 


Group Farming
வாழ்க்கையில் மையப் புள்ளியாய் இருக்கும்,அனைவருக்கும் வாழ்நாள் முழுதும் தோள் கொடுப்பது, அவரவர் மனைவியரே. மற்ற எல்லா பந்தங்களும், ரயிலில் சக பயணிகள் போல் விலகிப் போக, இடுகாடு போகும் வரை இற்றுப் போகாத உறவு இதுவே. நம் இல்லறம், நல்லறம் ஆவதும், செழித்து ஓங்குவதும், இவர்கள் கையில் தான்.பெண்கள் தாரமாய், தாயாய், குழந்தைகளுக்கு ஆசானாய், அனைத்துமாய் பல அவதாரம் தரிக்கின்றனர்.

குடும்பத்தில். இப் பெண்டிரை சமையல் கட்டுக்குள்ளேயே முடக்கி விடாமல்,அவர்களின் திறமையை சரியான முறையில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பும், ஊக்கமும் அளித்தால் ( Empowerment ) அதுவே நாம், நம் வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் செய்யும் அரும் பணியாகும்.", என்றார் ஆசிரியர்.

முகுந்தன் ஒப்பந்தக்காரராய் தொழில் செய்ய, எட்டாம் வகுப்பு வரை படித்த அவர் மனைவி, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராகி, தையல் தொழில் கற்றும் வருமானத்தை பெருக்கிக் கொண்டார்.சுத்தம், சுகாதாரம் பற்றிய ழிப்புணர்வும் மற்றும் சமூகம், பொருளாதாரம், அடிப்படைத் தேவைகள் பற்றிய அவசியமான அறிவை வளர்த்துக் கொண்டார்.மேலும் தன்னை முன்னேற்றிக் கொள்ள,பள்ளி இறுதித் தேர்வையும், தனிப்பட்டமுறையில் படித்து எழுதத் தலைப்பட்டார்.

வசந்தனின் துணைவியார், இளநிலைப் பட்டதாரி.இவரும் தம் கணவரின் ஒத்துழைப்போடு, தன்னுடைய நீண்ட நாள் கனவான ஒரு குழந்தைகளுக்கான பராமரிப்பகம்(Day Care Center) ஒன்றை நகரத்தில் துவக்கி, பயனுள்ள வகையில் தன் நேரத்தை செலவிட்டு வருமானத்தையும் பெருக்கிக் கொண்டார்.அக்கம், பக்கம் வேலைக்கு செல்லும் பெற்றோர் எண்ணிக்கை கூடவும், இன்னும் சிலபெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தார்.




முகுந்தனும், வசந்தனும் மனைவியருடன் பேசி,மாதாந்திர குடும்ப வரவு சிலவிற்கான தொகையை கொடுத்து தங்களை நச்சரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டனர்.

மேலும் ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்கள் "ஆண்,பெண் என குழந்தைகளை வித்தியாசம் பாராமல், இயன்றவரை உயர் கல்வி புகட்டவும், என அறிவுறுத்தினார்.

"ஈசனும் தன் உடலில் இடப் பக்கம் தந்து,பெண்மையைப் பேணி அர்த்த நாரீஸ்வரனாய் உள்ளார்" என்றார் ஆசிரியப் பெருமானார்.

நன்றி :கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

  1. நல்ல விடயங்களை எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. சகோதரி Chitra அவர்களுக்கு மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு
  3. "பயணங்களும் எண்ணங்களும்" பதிவர்க்கு என் மனம் கனிந்த நன்றி

    பதிலளிநீக்கு
  4. pengal veetin kangal...illai illai, idhayam endru sonnaal saala porutham....

    பதிலளிநீக்கு
  5. ''முகுந்தனும், வசந்தனும் மனைவியருடன் பேசி,மாதாந்திர குடும்ப வரவு சிலவிற்கான தொகையை கொடுத்து தங்களை நச்சரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டனர்''
    இந்த இடம் புரியவில்லையே சார் விளக்க முடியுமா?

    நல்ல பதிவு கல்யாணராமன் சாரின் அறிவுரைகள் அருமை நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  6. எப்போதும் குடும்ப சிலவுகளை நிர்வகிப்பதில் பெண்கள் திறமைசாலிகள்.மேலும் அவ்வோப்போது அடிக்கடி சிலவிற்கு பணம் கேட்கையில் கணவன்மார் எரிச்சல் படுவது வழக்கம் .சிலவுகளைப் பட்டியலிட்டு மொத்தமாக குறிப்பிட்ட நேரத்தில் கொடுத்துவிட்டால்,பெண்கள் பல வகையில் ஆக்கபூர்வமாய் உபயோகிப்பர்.எல்லாம் பட்டதும், பார்த்ததும் ,கேட்டதும் . தங்கள் கருத்துக்கு நன்றிங்க .radhakrishnan சார் ..

    பதிலளிநீக்கு