வெள்ளி, 3 டிசம்பர், 2010

கொஞ்சம் கடிக்கலாமா...

கொஞ்சம் கடிக்கலாமா...


எவுரு நோட்டு லேயோ ( Evernote ) ,வரவு செலவு கணக்கு   எழுதி பொட்டியிலே  (Dropbox) போட்டுட்டு,சோம்பல் முறிச்சிட்டு , ஹாய்யா பேஸ் புக்கில் (Facebook)  ஒரு
 கதை படிச்சார்.திடுக்கிட்டுப் போய் "யாஹூ", ன்னு,  கத்திட்டு சூடா "ஹாட்மெயில்"லே  ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு, ஆருகிட்டேயும் ( Orkut )பேசாம "ஜிமெயில்", புடிச்சு ஊருக்கு வந்துட்டார்.

"உம்",முன்னு இருந்த, இவரைப் பார்த்து ,என்னாச்சு 
இவருக்குன்னு" , ஐ(ய)ப்பாடு "(I pod ) வந்து ,எட்டு போன்
(Head Phone) பண்ணி விசாரிச்சா,அவரு கோவம் ஏன்னு புரிஞ்சுது.

"யு ட்யூப்" லே ஓட்டை,  தோட்டத்துக்கு  தண்ணி பாய்ச்ச முடியலே. ஹோட்டலுக்கு போனா "சர்வர்" பிரச்னை. வீட்டுக்குள்ள "மவுஸ்" தொல்லை.
"கீ போர்டு"லே வாசிக்க முடியலே. "பார்லர்", க்கு போனா  Brows(e) பண்ண முடியலே.
  
வீட்டுக்கார அம்மா "நெட்"டை தலையிலே மாட்டிகிட்டு
வெளியிலே  போய்ட்டாங்க.கடுப்பு வாராதா?.பின்னே.

நீங்களே சொல்லுங்க...ஞாயத்தை.......உங்களைத்தாங்க .....


                                                  

13 கருத்துகள்:

 1. நிசமாவே கடுப்பு வருமுங்கோ.....நன்னா ஜில்லுனு தண்ணி குடியுங்கோ...காமடி நன்னா இருக்கு .

  பதிலளிநீக்கு
 2. முடியல...கொஞ்சம் கடிக்கிறேன்னு சொல்லிட்டு அநியாயத்துக்கு கடிக்கிறீங்க..

  பதிலளிநீக்கு
 3. ஹையையோ கண்ள ரத்தம் வருது சார் விட்ருங்க ஓடிர்றேன்

  பதிலளிநீக்கு
 4. நகைக்கவும் வைக்கிறது, சுவைக்கவும் செய்கிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு நன்றிங்க நிலாமதி.ஜில்லுன்னு தண்ணி குடிச்சிட்டேன்..

  பதிலளிநீக்கு
 6. தினேஷ் எங்கே ஓடுறிங்க.நானும் கூட வர்றேன்..

  பதிலளிநீக்கு
 7. தொழில்நுட்பத்தில பூந்து விளையாடுறீங்க:)))

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப நன்றிங்க ரவி."வஷிஸ்டர் வாயால பிரும்ம ரிஷி",ன்னு கேட்ட மாதிரி இருக்கு....

  பதிலளிநீக்கு
 9. Prevention is better than cure..you had the premonition and forewarned,instinctingly ,I believe..Thanks a lot for your visit..

  பதிலளிநீக்கு