திங்கள், 13 டிசம்பர், 2010

வாழ்கைக் கோலங்கள் புள்ளி .2.

வாழ்கைக் கோலங்கள் புள்ளி .2.

முதலாளியை முழுச் சோம்பேறியாக்கு!.




முதலாளி என்பது நாம் எந்த பணியில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையில், மற்றொரு முக்கியமான புள்ளியாகும். பதவி உயர்விலிருந்து, பதவி விலகல் உள்பட, நம் வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய ,பெரும் வழிகாட்டியுமாய் அமையக் கூடியவர். "மனைவி அமைவதெல்லாம்...அப்படின்னா மாதிரி கூட சொல்லாங்க.....

வசந்தன் மேஸ்த்ரியாகவும்,முகுந்தன் பொறியியல் பட்டப் படிப்பை தத்தம் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டனர். வழக்கம் போல், இன்னுமொரு விடுமுறையில், இருவரும் ஆசிரியர் திரு.கல்யாணராமனைப் பார்க்கச் சென்றனர்.

வேலையில் பல சமயம், இருவரும் முதலாளி தொல்லைகள் தருவதைக் கூறினர். எல்லாவற்றையும் கவனமாய்க் கேட்ட ஆசிரியர் ஒரு சின்னக் கதையை சொன்னார்.

ஹெர்குலஸ் என்பவர், கிரேக்க கதைகளில் வரும்,நம்ம ஊர் பீமன் மாதிரி. மிகுந்த பலசாலி. இவர் ஒரு முறை உலகத்தின் கோடிக்கு யாத்திரை செல்கிறார்.அப்போது அட்லஸ் என்பவர் தான், உலகத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருந்ததாய் புராணம். ரொம்ப நாளா தூக்கி வச்சிருந்ததாலே,அவருக்கு தோள் நோவு கண்டுடுச்சு. இந்த சுமையை தூக்க கூடிய ஆள் யாரும், அந்த நாளிலே இல்லை. ஹெர்குலசை பார்த்தவுடன், அட்லஸ் ரொம்ப சந்தோஷப் பட்டார்.கிட்ட வந்தவுடன் "அப்பா என் சுமையை கொஞ்சம் தாங்கிக்கோ", இயற்கை உபாதையை முடிச்சிட்டு வர்றேன்னார். ஹெர்குலஸ் உலகத்தை தூக்கிக் கொள்ள அட்லஸ் "ஜூட்", விட்டார். அட்லாசின் நோக்கம் விளங்கிக் கொண்ட ஹெர்குலஸ், "அண்ணே, ஒரு நிமிடம், "இங்கே வாங்க" அப்படின்னு கூப்பிட்டார். "என்ன ?" என்று, எட்டியே நின்று கேட்ட அட்லாசிடம், "முண்டாசை சரியாகக் கட்டிகிட்டேன்னா, எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் என்னாலே தூக்க முடியும், நீங்க பொறுமையா திரும்பி வரலாம்", இன்னு சொல்ல, அட்லசும் உடனே, உலகத்தை மீண்டும் தோளில் சுமக்க. ஹெர்குலஸ் "எஸ்கேப்", ஆயிட்டார்.

எதுக்கு இந்த கதையின்னா "உலகத்தில் யாரும் சுமையை தூக்க விரும்பறதில்லே. எப்போடா இறக்கி வைப்போம்", என்பது தான் யதார்த்தம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கோ, முதலாளிக்கோ வேலைப் பளுக்கள், நிறைய பொறுப்புகள். இந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்ள, நாம் தயாரானால், குறிப்பு அறிந்து முன் கூட்டியே செயல்பட்டால்,உங்கள் முன்னேற்றத்தின் எல்லாப் படிகளிலும் உறு துணையாய் இருப்பார்", என அறிவுறுத்தினார். பளுவை பகிர்ந்தால்,அவர் மற்ற வேலைகளை முடிக்க, அவருக்கு அவகாசம் கிடைக்கும்.  

"நாணயம், நம்பிக்கை இரண்டையும் பயன் படுத்தி இன்னமும் முன்னேறலாம்", எனக் கூறி விடை கொடுத்தார்.இதே முறைகளை பின் பற்றி, உங்களுக்கு அடுத்த கட்ட தலைவர் களை", நீங்கள் உருவாக்கலாம் எனவும் பகிர்ந்தார்.

வசந்தனும், முகுந்தனும் அவர்கள் வாழ்கையில் கற்ற மற்றுமொரு முக்கியமான பாடம், இது .

நன்றி :கூகுள் படங்கள் . 

4 கருத்துகள்:

  1. ஐயா எந்தன் நூறாவது பதிவு தங்கள் பார்வைக்கு

    http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

    பதிலளிநீக்கு
  2. கதை முன்னேயே படிச்சது என்றாலும், வாழ்வியல் பாடத்தை நுழைத்தது மிக அருமை. நீங்க படிச்சதோ, கதை அடிச்சதோ, எப்படின்னாலும் நல்லா இருந்தது!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.தங்கள் பெற்றோரை வாழ்த்தி பாடிய கவிதை மிக அருமை.
    மேன் மேலும் பதிவுலகில் ஆக்கங்களை படைக்க வாழ்த்துகிறேன் ...

    பதிலளிநீக்கு
  4. கெக்கே பிக்குணிக்கு,
    தங்கள் வருகைக்கு என் நன்றியும் வணக்கமும்

    பதிலளிநீக்கு