வியாழன், 16 டிசம்பர், 2010

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி .....

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ..... 
 
கவலையின் ரேகைகள், 
கண்களில் தளும்ப, 
வாராத தலை,ரோமம் 
வழிக்காத முகம்.
 
பிரசவ அறையில் 
பிரவேசம் இல்லை.
விடிய விடியக் காவல், 
வாசல் நடையில்.
செவ்வரி விழிகள்,
சிந்தனைச் சுழல்கள்.
 
வரும் உயிர், 
தரும் உயிர்,
இரு உயிர் பற்றி, 
இனமறியா பயம்.
அழுகுரல் கேட்க, 
அங்கம் பதைக்கும்.
 
தாதியர் கிண்டலில் 
தந்தை முகம் நாணும்.
மகவு பிறக்க, 
மகன் இவன்,
தந்தையாய், ஆன நல்
தருணம், இன்று.
 
நூறாம் பதிவில்,
நூறாண்டு மேலும்
வாழ, ஈன்றோரை 
வாழ்த்தி, சீர் மிகு கவிதை பாடி,
நன்றிக் கடனை,
நா நயம் கூட்டி
 
நானிலம் போற்ற,
நவின்றாய். நீ வாழி!.
 
( நண்பர் தினேஷ்குமார் அவர்களின் நூறாம் பதிவை ,வாழ்த்தி சமர்பிப்பது )             
       

13 கருத்துகள்:

  1. ஓ..! இது உங்கள் நூறாம் பதிவா.. நான் முன்பொருமுறை கூறியதுபோல, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். எனும்படி வாழ்வதே.நீங்கள் அப்படித்தான் என்று என் உள்மனது கூறுகிறது. நீ வாழி என்று முடித்திருக்கிறீர்கள். அந்த நீ யார் என்று இன்னும் தெளிவாக இருந்திருக்கலாமோ.?
    அனைவரின் நலம் விழையும் ஜீஎம்பீ.

    பதிலளிநீக்கு
  2. அன்பு அய்யாவுக்கு வணக்கம். நான் தமிழ்க்காதலன். உங்களின் இந்த பதிவுப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன். ஒரு தந்தை என்கிற உணர்வு உள்மனதுக்குள் உணர முடிந்த ஒருவரால்தான் இப்படி பாராட்ட முடியும். நீங்கள் வாழ்ந்த விதம் இங்கே புலப்படுகிறது. நான் கொடுத்து வைக்கவில்லையே என்கிற ஆதங்கம் விழிகளில் நீரலையாய். எமது நண்பரின் 100 வது படைப்புக்கு இதை விட சிறந்த வாழ்த்து வேறெதுவுமில்லை. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். எமது நண்பர் இன்னுமாயிரம் ஆயிரம் சாதிக்க வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்.
    உங்களை போல் ஒரு தந்தை எனக்கு வேண்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. நடைபயிலும் பாலகனாய் நனைந்தேன் ஐயா உம் கவி மழையில் நன்றி சொல்ல வார்த்தையில்லை எம்மிடம் உம் பாதம் சரணடைந்தேன் பாலகனாய் என்றும்

    பதிலளிநீக்கு
  4. அன்பு நண்பர்கள் , தினேஷ் குமார் அவர்களுக்கும், தமிழ்க் காதலன் அவர்களுக்கும்,
    என் தந்தையை பற்றி நான் பெருமிதம் அடைந்த கணங்கள் கோடிகணக்கில்..
    வெறும் வார்த்தையில் இல்லாமல் ஒரு தோழனாக முன்னோடியாக ஆசானாக
    வாழ்கையை பற்றி நாங்கள் எங்கள் தந்தையிடம் படித்த பாடங்கள் பல..
    ஆயினும் இன்று உங்களிருவரின் வாழ்த்து படித்து ஆனந்த கண்ணீரில் நான்..
    இன்னுமொரு கணம் பெருமை பட, இந்த பெருமகனின் மகள் நானென்று...

    பதிலளிநீக்கு
  5. பார்த்தீர்களா, எவ்வளவு கவனக்குறைவு என்னிடம்.நண்பர் தினேஷ் குமாரின் நூறாவது பதிவுக்கு நீங்கள் எழுதிய வாழ்த்து என்று கவனிக்காமல் உங்களது பதிவுக்கு உங்கள் தந்தையை நினைவு கூர்ந்து எழுதியது என்றென்ணி விட்டேன். நண்பர் தினேஷுக்கு என் வாழ்த்துக்கள். கவனக்குறைவுக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ( நண்பர் தினேஷ்குமார் அவர்களின் நூறாம் பதிவை ,வாழ்த்தி சமர்பிப்பது )


    வாவ்! Impressed! தினேஷ் குமாருக்கு இதுவே பரிசு கேடயம் ........ அருமையாக இருக்குதுங்க!

    பதிலளிநீக்கு
  7. G.M.B. அய்யாவுக்கு நன்றிங்க.தடம் பதித்து தன்மையாய் கருத்து சொல்லியதற்கு ..

    பதிலளிநீக்கு
  8. நன்றிங்க.திரு.தினேஷ்குமார்.. ..பெற்றோருக்கு வாழ்த்துச் சொல்ல வாய்ப்பு அளித்தமைக்கு ..

    பதிலளிநீக்கு
  9. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கிறேன் ஆஷா

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நன்றிங்க தமிழ்க் காதலன்.உணர்வுகளால் உங்களை உணர்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப நன்றிங்க chitra ..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.உங்களை வெட்டிப் பேச முடியாது என்பதை உங்கள் வலைத் தளத்திலிருந்து கண்டு கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  12. அன்பு தோழி ஆஷாவுக்கும், ஐயாவுக்கும் வணக்கம். உங்களின் அன்பில் இன்னும் ஈரமாய் மனமும், விழிகளும். எப்போதும் தொடர்ந்திருங்கள் எங்களுடன்.... அன்பான நெஞ்சமுடன் தமிழ்க்காதலன்.

    பதிலளிநீக்கு
  13. நன்றிங்க தமிழ்க் காதலன்.ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்...

    பதிலளிநீக்கு