செவ்வாய், 7 டிசம்பர், 2010

நன்றி நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

நன்றி  நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

எறிந்த குப்பை,
அழுகிய உணவு,
எச்சம் சொச்சம்,
எல்லாம் பொறுக்கி.
கொட்டிடும் அழுக்கை, 
கூட்டியள்ளும்,
குப்பைக்காரர். 
குப்புசாமி.

பெய்யும் மழையில், 
நாய்கள் ஊளை, 
விடியற்க் காலை.
படிகள் ஏறி, 
குடிக்க, படிக்க 
பாலும், பேப்பரும் 
பாங்காய்ப் போடும், 
பள்ளிச் சிறுவன். 
பழனிச்சாமி.

இருந்தால்
ஏற்றம், 
உதிர்ந்தால் 
மாற்றம்.
நாம், முடி  துறக்க 
நம், முடி திருத்தும் 
மூலைக் கடை 
முனுசாமி.

நெடு மழை, 
நீள் வெயில், 
கடும் புயல். 
கம்பும், நெல்லும் 
கண்ணீரில் மூழ்க, 
வயலில் நித்தம், 
வயிற்றில் நெருப்புடன்
வேளாண்மை புரியும்,
வேலுச்சாமி. 

இச்சாமிகள் இன்றி,
சத்தியமாய் தானே!  
சாத்தியமில்லை,
நம் சுக வாழ்வு .
நன்றிகள் நவில, 
நேரமிலை என   
நினை யாமல்,
நின்று,  நாம்
சின்னப் புன்னகை,
சிறிதாய் கைகுலுக்கல் 
சிந்தும் அன்புடன், 
சிரிப்புடன், சில சொல்.

உள்ளத்தின் 
உயரம் காட்டி
உழைப்பின் மேன்மையை 
உணர்வால் போற்றுவோம் !
உயரும் உலகம்.
துயரம் குறையும்.
உலகில் கொஞ்சம்.   
            


4 கருத்துகள்:

  1. எல்லா சாமிகளின் உழைப்பின் மேன்மையை உணர்வால் போற்றும்போது அந்த “பெரிய சாமியைக் காணமுடியும்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு