திங்கள், 6 டிசம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம் ..(4)

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்..(4)

"தோளுக்கு மேல் உயர்ந்தால் தோழன்"

1962-ல்பள்ளி இறுதிப் படிப்பு முடித்து, குடந்தை கலைக் கல்லூரியில், புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். கிராமத்து பையன்களிடம் , குழாய் சட்டை அதிகமாய் புழங்காத காலம். சிறுவனான நான், உயரம் குறைந்த கட்டை வேட்டி உடுத்து கல்லூரிக்கு செல்ல, பக்கத்துக்கு சிறு நகரம் "வலங்கைமானில்", நிற்கிறேன்.

பேருந்து நிற்குமிடம் ஒட்டினாற் போல், ஒரு கூட்டுறவு அங்காடி. எங்கள் நெருங்கிய குடும்ப நண்பரின் மகன், அந்த அங்காடியின் மேலாளர். கடையில் நிறைய மளிகை சாமான் வாங்கும் கூட்டம். கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த மேலாளர், என்னைப் பார்த்து, "என்னடா தம்பி?. காலேஜ் போகிறாயா?." எனக் கேட்டார். நான் ஒரு சிறிதும் யோசியாமல் "ஆமாண்டா!காலேஜ் தான் போறேன்", எனச் சொல்லி விட்டு, பஸ் ஏறி விட்டேன்.அவர் முகம் கறுத்து விட்டது. எனக்கோ உடனே "அப்படிப் பேசியது மிகவும் தவறு" என்ற மன உளைச்சல். மேலும் தந்தைக்கு இது தெரிந்தால், என்னை "உரித்து உப்பு தடவி விடுவார்கள்", என்ற பயம். இப்போது வெளி வந்த "வெயில்",படக் காட்சி மாதிரி நிழலாட்டம், ஓட ஆரம்பித்தது மனதுக்குள் அப்பொழுது.

மாலையில், கல்லூரி முடிந்து வீடு வந்து சேர்ந்தேன். மேலாளர் சைக்கிளில், என் கிராமத்திற்கு வந்து, என் தந்தையின் வரவுக்காக காத்திருந்தார். அவர் காபி சாப்பிட, எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது. தந்தை வந்தார். பரஸ்பரம் குசலம் விசாரித்த பின்னர், நடந்ததை விலா வாரியாக எடுத்துரைத்தார், மேலாளர். எல்லோர் முன்னிலையிலும், பெருத்த அவமானமுற்றதாய் கூறினார்.

கதவுக்குப் பின்னால்,முழு வேக ஜன்னியில்,ஓடி ஒளிய தயாராய்நின்றேன்.என் தந்தை மிகக் கோபமாய்,என்னை கடுமையாய் தண்டிப்பதாய்க் கூறினார்கள். என் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று. "அறியாப் பருவம்",என் செயலை மன்னிக்கச் சொல்லி வேண்டினார்கள். பதறிய மேலாளர் "நீங்கள் என் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர், சிறு பிள்ளை ஏதோ சொல்லி விட்டார் ",என்று சமாதானமடைந்ததார்.      


என் தந்தை, பிறகு,அவரிடம் "என் மகன் சைக்கிள் ஏறி பள்ளி செல்ல ஆரம்பித்த போதே"வாடா,போடா;",என்று விளிப்பதை நிறுத்தி "வா ,போ என்று கூப்பிட ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் பேர் சொல்லியோ அல்லது "தம்பி" என்றோ அழைக்கிறேன். "தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை", அவனை நான் விசாரிக்கிறேன், என்று சொல்லி, அனுப்பி வைத்தார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து என்னைக் கூப்பிட்டு "சொன்னது தவறில்லையப்பா?",என்றார்கள். என்னை அடித்திருந்தால் கூடப் பரவாயில்லை.என் நெஞ்சு வலித்தது.
   





" தோளுக்குமேல் வளர்ந்த குழந்தைகளை தோழனாய் ", பாவிக்க வேண்டும் எனபது நான், என் தந்தையிடம், அன்றுகற்ற  பாடம்.








நன்றி :கூகுள் படம் . 

8 கருத்துகள்:

  1. // 1962 -ல்பள்ளி இறுதிப் படிப்பு முடித்து, குடந்தை கலைக் கல்லூரியில், புகுமுக வகுப்பில்
    சேர்ந்தேன். //

    ----தொடுவானம்.

    ஆஹா ...நமக்கும் ஒரு பெர்ரீய ..............அண்ணாத்தே ஒருத்தர் இருக்கார் இங்கே!.
    தொடுவானம் நல்லா இருக்கு அண்ணா .....

    பதிலளிநீக்கு
  2. மிகசிறந்த உருவாக்கம் நீங்கள் ...

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் போக போக தான் தெரியும்

    பதிலளிநீக்கு
  4. தம்பி கக்கு - மாணிக்கத்திற்கு மிகவும் நன்றி.பொன் மழைப் பொழுதில் உங்கள் வலைப் பக்கம் சென்றேன்.மாணிக்கங்களா கக்கி இருக்கீங்க ..தங்கள் வருகையில் மகிழ்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் நன்றிங்க செந்தில்.தங்கள் வருகையில் மகிழ்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  6. THOPPITHOPPI தப்பி தப்பி வந்ததுக்கு நன்றிங்க.நீங்க கொடுத்த விலாசம் சரியாய் இருக்கு ஆளைக் காணலேன்னு கேள்வி."போக போகத் தெரியும்", அப்படின்னு சொல்லிருக்கிங்க."இந்த பூவின் வாசம்" இன்னு எடுத்துக்காம ,"வாசமில்லா மலரிது"... ...

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நன்றிங்க ஸ்ரீநிவாசன்

    பதிலளிநீக்கு