பயந்தேன் ..தெளிந்தேன் ..
நரிகள் ஊளையிட ,
நடுச் சாமத்தில்,
உடுக்கையடித்து,
நடு நடுங்க வைக்கும்,
குடு குடுப்பைக்காரன்.
இரவில் மரமும், நிழலும்
பெரும் பேயாய், பூதமாய்
காற்றின் அசைவில்,
கேட்ட கதை நிசமின்னு
கலக்கிடும், இன்னமும் என்னை.
எதிரிகளை பிரும்மாண்டமாய்,
எப்போதும் கற்பனை செய்து,
எண்ணங்கள் அச்சத்தில்,
என்னை முடக்கியபோது ,
செயலிழக்கச்
செய்த பயம்.
புரிதல் இல்லை,ஆதலின்
தெளிதல் இல்லை.
புரிந்துணரும், முயற்சிக்கு
வழி தெரியா தென்னை
வாட்டுவித்த பெரும் பயம்.
பயந்தேன். பயம் தெளிய
உபாயம் தெளிந்தேன் .
பயம் எனைக்கண்டு, பயப்பட
நிழலெல்லாம்,
நிசமில்லை என,
நான் தெளிந்தேன்.
இமை மூடின்,
இருட்டாகும்,வெளிச்சம்.
இழப்பதற்கு,
உயிர் தவிர
இனி ஏதும் இல்லை,
என்றதும்
இற்றுப் போனது, பயம்
அற்றுப் போனது, இப்போது.
இமை மூடின்,
பதிலளிநீக்குஇருட்டாகும்,வெளிச்சம்.
இழப்பதற்கு,
உயிர் தவிர
இனி ஏதும் இல்லை,
என்றதும்
இற்றுப் போனது, பயம்
அற்றுப் போனது, இப்போது.........
உயிர் தவர எதுமில்லை இழப்பதற்கு நம்மில் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் வாழ்க்கை நோக்கி பயமில்லை
வாழ்வியலின் பயம் பேசியிருக்கிறீர்கள். அருமை.
பதிலளிநீக்குஇழப்பதற்கு உயிர் தவிர இனி ஏதும் இல்லை.. சரிதான்..ஆனால் உயிர் இழக்கும் பயம் உள்ளதே--
பதிலளிநீக்குமரண பயம் என்பார்களே---இழப்பதே தெரியாமல்
நிகழ்ந்தால் மிக நன்று நிழல் பயங்களிலிருந்து மீளுதல் அவசியம்.செய்யும் தவறுகளின் விளைவுகள் கண்டு அஞ்சுதல் அவசியம். மாறுபட்ட கருத்தல்ல என்றே எண்ணுகிறேன்.
திரு தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றி ...
பதிலளிநீக்குதிரு. தமிழ்க் காதலன் அவர்களுக்கு என் நன்றி ... தங்கள் கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாய், போற்றுதலுக்கு உரியதாய் உள்ளது. தொடர என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதிரு G.M.B..அய்யா அவர்களுக்கு என் நன்றி ... தங்கள் கருத்துரைகள்மேன் மேலும் சிந்திக்கத் தூண்டுகின்றன.இறப்பு சடுதியில், சங்கடமின்றி வரவேண்டும்.அவ்வ்வளவே.மற்ற பயங்கள்.. நிழல்கள்.நடந்தே தீரும்,இறப்பு நிசம்.நிதரிசனம்.
பதிலளிநீக்குபயம் என்று ஒன்று இருபதனால் தான் ஜிவராசி கட்டு கோப்பாய் இருபதாய் நான் நினைக்கீரேன். அரியாமை இல்லாதிருப்பின் அது நன்மை. பயம் வேண்டும் ஆனால் பயதினால் வரும் பதற்றமே மனிதனை செயலற்று போக செய்விப்பது. அதுவே பயத்தை கண்டு பயம் கொல்ல வைக்கிரது
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றிங்க.முன்றாம் கண்ணிற்கு 3rdeye- க்கு என் முதல் வணக்கம்.
பதிலளிநீக்குபுத்தாண்டுவாழ்த்துக்கள்.