ஞாயிறு, 5 டிசம்பர், 2010

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் ....

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்.. (கடந்த வாரம், நவம்பர் மாதம்,28 -ம் திகதி "விக்கி லீக்", என்னும் அமைப்பு தூதுவரகங்களில் பரிமாறப்பட்ட ரகசிய தந்தி ஆவணங்களை வெளியிட்டு, உண்மைகளை தோலுரித்து காட்டியது.கிட்டத் தட்ட 2,50,000 கேபுல்களுக்கு ஜூலியன் அசான்ஜே( Julian Assange ), மற்றும் அவரின் தோழர்களால்,இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கசிந்த ஆவணங்களில்,கிடைத்த தகவல்கள் பற்றிய கருத்துரை.)

Julian Assange

அசான்ஜே அடித்தார்,
ஆப்புகள் அனைத்தும்
குவார்டர் மில்லியன்,
கோப்புகள் இறைத்தார்,
குவலயம் முழுதும்

சுதந்திர நாடென்றார்.
சொர்க்க பூமியென்றார்
தந்திர நாடாகி,
தர்க்க பூமியாய்.

புது விருந்தளித்து,
புன்னகை சிந்தி. 
கை நனைத்த பின்னர், 
கை பல குலுக்கி, 
கட்டித் தழுவி,

விடைபெறும் முன்னே,
விடுக்கிறார் மடல்அம்பை.
இளக்காரம் 
இடிச்சொல், என

புல்லுருவி வாசகம்
புரிந்துணர்வில், 
புரியாத வார்த்தைகள்.
புதைந்த மர்மங்கள். 

சங்கேதமாய்,தந்திகளில்
சடுதியில் செல்லும். 
சங்கேத சந்துகளின், 
சணல் பிரித்து, 
சங்கிலிகளின்
பின்னல் அறுத்து 
இனம் காட்டினார் 
இன்று இணைய தளத்தில்.

உள்ளொன்று வைத்து 
புறமொன்று பேசுவார்.
உதட்டுச் சாயம் 
உலரும் முன்னரே.
உலகே நீ உணர்வாய்.
உய்யும் வழி தேடிடுவாய்.

6 கருத்துகள்:

 1. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

  பதிலளிநீக்கு
 2. என்னமோ நடக்குது
  மர்மமா இருக்குது..

  ஒன்னுமே புரியலை
  உலகத்திலே..

  இப்படி ஆகிடுச்சுங்க நம்ம நிலைமை..

  பதிலளிநீக்கு
 3. after a long time been in my blog as well had mood to check your blog. thanks for dropping. reading a couple of your post and interesting. more interesting your place of stay mentioned - thanjavur - inam puriyatha irupu

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க நைஜீரியா ராகவன்...

  பதிலளிநீக்கு
 5. Hearty welcome ..Thanks a lot..let us keep meeting at blogspots..Known Staranger..but no longer..

  பதிலளிநீக்கு