வியாழன், 2 டிசம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்.. (3)..

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்.. (3)..

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு"















மறைந்த என் தந்தை ஒரு விவசாயி,கிராமத்துமணியக்காரர், பொதுப்பணித் துறை, ஒப்பந்தக்காரர், என பலதொழிலில் ஈடுபட்டிருந்தவர்.ஒரு டிராக்டரும், லாரி ஒன்றும் சொந்த உபயோகத்திற்காக இருந்தது. இதனால் தினமும், விவசாய தொழிலாளிகளுக்கான கூலி நெல், தளவாட சாமான் வாங்கும் சிலவுகள், நிலத்திற்கான  கிஸ்தி,  வரி வசூல் செய்த பணம் என்று, ஏகப்பட்ட வரவு சிலவுகள்.

அனைத்தையும், அவ்வப்போது டைரியில் எழுதி வைப்பார்கள் ஸ்ரீவித்யா என்னும் பெரிய டைரி தான் அவர்களின்  அந்தக் காலத்திய, ஆஸ்தான டைரி. பின் இந்த சிலவுகள் யாவும்,  இனம் பிரிக்கப் பட்டு, ஒரு பெரிய பேரட்டில் தலைப்பு வாரி யாய் எழுதுவார்கள். குறிப்பிட்ட பணி முற்றுப் பெற்ற பின் வரவு செலவுகள்,சரி பார்த்து லாப நட்ட கணக்குகள் ஆராயப் படும்.

இந்த கணக்குகளில் விவசாய நெல் உற்பத்தி முதல்,ஏழு குழந்தைகளாகிய எங்கள் படிப்புக்கு ஆகும் சிலவு, உள்பட அடங்கும்.எனக்கு விவரம் தெரிந்து பள்ளிப் படிப்பு இறுதி வகுப்பு வரை, பெரும் பகுதி இந்த கணக்கர் பணி, என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.தந்தை வீட்டில் இல்லாத சமயங்களில், கூலிப் பணம் பட்டுவாடா செய்வது எல்லாம்,பெரும்பாலும் என் பொறுப்பில்.தான்.

இந்த குடும்ப சூழல் வரவு, சிலவு, லாப, நட்டம்,எதிரிடும் அவசிய, அனாவசிய  செலவினங்கள், பற்றிய அறிவையும், முன்னுரிமை(Prioritization), கட்டுப் படுத்தல் (Financial Control) போன்ற தாக்கத்தை,எனக்கு எர்ப்படுதித் தந்தன.

நான் சுயமாய் சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து கணக்கு எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தியது. அலுவலக நிர்மாணப் பணிகளின் போதும், வாழ்க்கையில் பொருளாதாரப் போராட்டங்களின் போதும், நிதி நிலைமை களைச் சமாளிக்கும்,  உத்திகளைத் உணர வைத்தது. அடிப்படை யிலிருந்து திட்டமிடல்(Zero Based Budgeting),  முழுப் பயன்பாடு (Optimization), ஆகிய உத்திகளைப் புரிந்து கொள்ளவும், பின்னாளில் செயலாக்கவும் துணை நின்றது.

காலம் சென்ற என் தந்தையின் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு", என்ற அறிவுரையே பல கோணங்களில்,  சீர் தூக்கிப் பார்த்து செயல் பட வைத்த, என் அடிப்படை பொருளாதார  அறிவுக்கான  அஸ்திவாரம்.

6 கருத்துகள்:

  1. மிக நன்றாக உள்ளது! நல்ல தந்தை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
    எந்நோற்றான் கொல் எனும் சொல்.

    பதிலளிநீக்கு
  3. நன்று....

    நானும் அப்பாவின் நெல் வியாபரா கணக்குகளை பராமரிக்கும் கணக்குபிள்ளை:)

    பதிலளிநீக்கு
  4. தலை முறை இடைவெளி இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ரவி

    பதிலளிநீக்கு