சனி, 18 டிசம்பர், 2010

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .4.


தன்னார்வமும்..புதுப் புது உத்திகளும்

ஆசிரியர் திரு.கல்யாணராமன்,நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்காக, நகரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதை கேள்வியுற்று வசந்தனும், முகுந்தனும் நலம் விசாரிக்க சென்றனர்.

அப்போது வசந்தன் ஆசிரியரிடம், தான் தயார் நிலையில் உள்ள கான்க்ரீட் கலவையையும்( Ready  Mix  Concrete ) , முன் கூட்டியே தயாரிக்கப் பட்ட கட்டுமான தளவாடங்களையும் (Pre Fabricated Structures )  தம் தொழிலில் பயன் படுத்துவதாய் கூறினார்.

முகுந்தனும் வரை படங்கள் மற்ற வேலைகளுக்கு,ஆட்டோ டெஸ்க்( Auto Desk Civil 3D) போன்ற கணினி மென்பொருளை உபயோகிப்பதாய் சொன்னார்.

ஆசிரியர் நாளுக்கு நாள் முன்னேறும், தம் முன்னாள் மாணாக்கர் பற்றி மிகவும் மனமகிழ்ந்தார். " தன்னார்வமும், அறிவுத் தேடலுக்கான உந்துதலும் இருந்தால், எவரும், எப்பணியிலும் மேன்மையுரலாம்", எனக் கூறினார்.





வழக்கமான வழி முறைகளில இருந்து மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து மாற்றங்கள் (Innovation ) செய்தால், உற்பத்தி சிலவை குறைத்து, கால விரயம் தவிர்த்து,  பொருட்களின் பயன்பாட்டை மேம்படுத்தலாம். உற்பத்தி, நுகர்தல் இவற்றின் இடைவெளியை சுருக்கலாம்,

முடிவெடுக்கும் திறன்(Decision Making ), மாற்றான யோசனை (Out of Box Thinking ), விதி முறைகளில் விலகிய நடைமுறை ( Out of Norms ), இவற்றை கைக் கொள்வதால் பயனுள்ள மாற்றங்கள் பல,சாத்தியம். மனிதஆற்றல்,யந்திரங்கள், மூலப் பொருட்கள் ( Man,Machine and Material ) இவற்றை மேற்கூறிய கோட்பாட்டில் ஆய்ந்து, பின் மாற்றங்கள் செய்தல் பெரும் பயன் அளிக்கும், என்றார்.

மேலும் உதாரணத்திற்காக,

உழவுத் தொழிலில் பாய் நாற்றாங்கால் பயன்பாடு பற்றியும், அதனால் மிச்சமாகும், நிலம் மற்றும்  நீர்த்தேவை...

சுய  உதவிக் குழுக்களின் (Self  Help Group ) நிதி உதவி மூலமாக ( Micro Financing ), மகளிர் அடையும் மேம்பாடு கிட்டத் தட்ட98 % விழுக்காடு வாங்கிய கடன் திரும்பச் செலுத்தப்படல்.

டெல் கணினி ( Dell ) , நைக் காலணி ( Nike ) போன்ற  உற்பத்தியாளர்கள் , நுகர்வோர் தேவைக்கு ஏற்ப வடிவு அமைத்துக் கொடுக்கும் திறன்.

ஐ-கூகுள்( i-Google ) , இணைய தளத்தில்( இன்டர்நெட் ) தேட நினைத்ததை எளிதாக்கிக் கொடுக்கும் வசதி,

     என எல்லாமே "வேலையை எளிதாக்கவேண்டும்", என்ற மாற்றுச் சிந்தனையால் தான், என்றார். இந்த வரிசையில் தென் கொரியா முதலிலும், அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன் அடுத்தடுத்து வருவதாகவும்,  சீனா பதின்மூன்றாம் இடத்திலும், இந்தியா பதினைந்தாம் இடத்திலும் இருப்பதாய், ஆதங்கப்பட்டார்.

நோயுற்ற மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனாள், என்பதால் பல  வருடங்கள், தனியனாய் 120 மீ. நீளம் 10 மீ.அகலம் மலையைக் குடைந்து வழியை ஏற்படுத்தியபீகாரின் தாஸ்ரத் முன்ஷி( Das Rath Munshi )

தன்னுடைய டிரக்கை வீட்டிற்க்கு அருகாமையில் நிறுத்த இடம் இல்லை என்று, 14வருடம் சுத்தியலும் உளியும் கொண்டு 10 மீ. நீளம் 4 மீ. அகலம் மலையில் சுரங்கப் பாதை அமைத்து 7 கி.மீ சுற்றி வந்து விவசாயம் செய்த மக்களுக்கு குறுக்கு வழியை ஏற்படுத்திய, பீகாரின் ராமச்சந்திர தாஸ். 

எரிகின்ற நெருப்பின் உள்ளே புகுந்து எண்ணைக் கிணறுகளின் தீயை அணைக்கும் உபாயம் கண்ட பால் நீல் ரெட் அடைர் ( Paul Neal Red Adair )

என, எல்லோருமே மாற்று வழிகளைக் கண்டு பிடித்தோர் ( Innovators ) தாம். வாழ்க்கை, தொழில்கூடம் எல்லாமே, ஒரு பரிசோதனைச் சாலை தானுங்க!

சின்னச்,சின்னதா சோதனை பண்ணிப் பார்த்து வெற்றி அடையலாங்க!

"அடிமேல்,அடி எடுத்து வச்சா  சீக்கிரமே சிகரத்தை எட்டிடலாம்", என்றார்.ஆசிரியப் பெருமகனார்.

நன்றி : கூகுள் படங்கள்

11 கருத்துகள்:

  1. வாழ்க்கை, தொழில் கூடம் எல்லாமே, ஒரு பரிசோதனைச் சாலை தானுங்க !சின்னச் சின்னதா, சோதனை பண்ணிப் பார்த்து வெற்றி அடையலாங்க !.


    ......"மாத்தி யோசி" கான்செப்ட் பற்றி உங்கள் பாணியில் அருமையாக சொல்லி இருக்கீங்க... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. உதாரணங்கள் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் வானம் தொட்டுவிடும் தூரம் தான்.

    பதிலளிநீக்கு
  3. W
    நம்மால் முடியும் என்ற நம்பிக்கை மிகமிக அவசியம்.வெற்றி கொள்ள வேண்டும் என்கிற வெறியும் உந்துதலும் வேண்டும்.ஆசிரியர் போன்றோரின் வழிகாட்டல்கள் உதவும். தொடர வாழ்த்துக்கள்’

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க.. சிவகுமாரன்

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் ஊக்கம் தரும் உங்கள் கருத்துக்கும் மிக நன்றிங்க.. G.M.B..Sir..

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் வைகறை அவர்களுக்கு தங்கள் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக மிக நன்றிங்க.தங்களுக்கு என்
    மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. //முடிவெடுக்கும் திறன் ( Decision Making ),வழக்கத்திற்கு மாற்றான யோசனை ( Out of Box Thinking ), விதி முறைகளில் இருந்து விலகிய நடை முறை ( Out of Norms ), இவற்றை
    கைக் கொள்வதால் பயனுள்ள மாற்றங்கள் பல, சாத்தியம்.//
    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்,காளிதாஸ்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. சென்னை பித்தன் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. இன்று வலைச்சரத்தில் தங்கள் வலைப்பக்கங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தங்கள் சிறப்பான பணி தொடரட்டும்
    நன்றி

    பதிலளிநீக்கு